
விறுவிறுப்புக்கும், சண்டை சச்சரவுக்கும் பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான முதல் ப்ரோமோவிலேயே, லாஸ்லியா மீது சாண்டி எதேர்ச்சியாக மோதி கீழே அவர் விழ, அதனால் கவின் சாண்டியிடம் சண்டை போட்ட காட்சி வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், விளையாட்டில் கவின் தன்னுடைய கவனத்தை செலுத்தாமல், லாஸ்லியா கீழே விழுந்ததால் அவருக்கு என்ன ஆனது, என்பதை விசாரிப்பதில் தான் அதிக அக்கறை காட்டுகிறார்.
இதனால் மற்ற போட்டியாளர்கள் கடுப்பாகிறார்கள். லாஸ்லியா கேம் முடிந்த பின் பார்த்து கொள்ளலாம் இப்போது போய் விளையாடு என கூறிய பின், மீண்டும் விளையாடுவதற்காக தன்னுடைய இடத்திற்கு வருகிறார் கவின்.
இதற்கு ஷெரின் இஷ்டம் இருந்தால் விளையாடுங்க என கவினைபார்த்து கூறுகிறார். இதற்கு கடுப்பான கவின், யார் ஒழுங்கா விளையாடுறீங்க என கேள்வி எழுப்ப... ஷெரின் மிகவும் கோவமாக, தன்னுடைய கூடையில் உள்ள பந்துகளை எட்டி உதைத்து விட்டு இந்த கேம்மை விட்டு வெளியேறுகிறார்.
கவின் காதலுடன் லாஸ்லியாவை விசாரித்தால் இந்த பிரச்சனை வெடிக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.
இதுகுறித்த ப்ரோமோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.