Nayanthara Vignesh Shivan wedding : நயன்தாரா திருமணத்தில் கலந்துகொள்வதற்காக காலை முதலே ஏராளமான திரையுலக பிரபலங்கள் மகாபலிபுரம் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
நடிகை நயன்தாராவின் திருமண வேலைகள் ஒருபுறம் பிசியாக நடைபெற்று வந்தாலும், அவர் திருமண நாளில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக மிகப்பெரிய உதவி ஒன்றை செய்துள்ளாராம். இன்று மதியம் தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்ற இல்லங்களில் உள்ள 16 ஆயிரம் குழந்தைகளுக்கு மதிய உணவு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்துள்ளாராம்.
நயன்தாராவின் இந்த தங்கமான மனதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இந்த செயலின் மூலம் ரியல் வாழ்க்கையிலும் தான் ஒரு லேடி சூப்பர்ஸ்டார் என நயன்தாரா நிரூபித்து உள்ளதாக அவரை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
நடிகை நயன்தாராவின் திருமணம் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் கலந்துகொள்வதற்காக காலை முதலே ஏராளமான திரையுலக பிரபலங்கள் மகாபலிபுரம் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இன்று மதியம் இவர்களது திருமண புகைப்படம் வெளியாக வாய்ப்புள்ளது.
இதையும் படியுங்கள்... Nayanthara Vignesh Shivan wedding : ஆவலோடு காத்திருந்த உறவினர்கள்... அழைப்பு விடுக்காத விக்னேஷ் சிவன்