
நடிகை நயன்தாரா இன்று பல தமிழ் ரசிகர்களாலும் ரசிக்கபடும் நடிகையாக வளம் வருகிறார்.
மேலும் இன்று கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்தையும் பெற்று முன்னணி நடிகையாக உள்ளார்.
தற்போது இன்று பலர் ஒன்று கூடி பீட்டாவை இந்தியாவில் தடை செய்து,தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டை மீட்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
மேலும் ஜல்லிக்கட்டுக்கு பல நடிகை நடிகர்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நடிகை நயன்தாராவும் தற்போது தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தனக்கு வாழ்வளித்த தமிழ் மக்களுக்காக நான் எப்போதும் குரல் கொடுப்பேன் என கூறியுள்ளார்.
அதே போல தற்போது ஜல்லிக்கட்டுக்கு போராடி வரும் அணைத்து மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தன்னுடைய வாழ்த்தை தெரிவித்து, பீட்டா அமைப்பை முழுமையாக இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார் . மேலும் இந்த போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெரும் எனவும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.