’உள்ளே வராதே!’ விக்னேஸுக்கு தடை போட்ட நயன் : குஷி கோடம்பாக்கம்!

Published : Sep 21, 2019, 07:17 PM IST
’உள்ளே வராதே!’ விக்னேஸுக்கு தடை போட்ட நயன் : குஷி கோடம்பாக்கம்!

சுருக்கம்

ஞானவேல்ராஜா தயாரிப்பில் சூர்யாவை வைத்து இயக்க சிறுத்தை சிவா எப்பவோ ஒரு அக்ரீமெண்டிலிருந்ததும், அதற்கு அவர் தயாராகையில் ரஜினி படம் நெருங்கி வந்ததும் ஊரறிந்த சேதி. சூர்யாவை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு ரஜினியிடம் ஓடினார் சிவா. ஆனால் தயாரிப்பாளர் ஞானவே இதை வன்மையாக எதிர்க்க, விஷயத்தைக் கேள்விப்பட்ட ரஜினி ‘ப்ளீஸ் அதை முடிச்சுட்டு வாங்க. நாம சேர்ந்து பண்ணலாம்.’ என்று பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வெச்சுட்டாராம். 

*    ஞானவேல்ராஜா தயாரிப்பில் சூர்யாவை வைத்து இயக்க சிறுத்தை சிவா எப்பவோ ஒரு அக்ரீமெண்டிலிருந்ததும், அதற்கு அவர் தயாராகையில் ரஜினி படம் நெருங்கி வந்ததும் ஊரறிந்த சேதி. சூர்யாவை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு ரஜினியிடம் ஓடினார் சிவா. ஆனால் தயாரிப்பாளர் ஞானவே இதை வன்மையாக எதிர்க்க, விஷயத்தைக் கேள்விப்பட்ட ரஜினி ‘ப்ளீஸ் அதை முடிச்சுட்டு வாங்க. நாம சேர்ந்து பண்ணலாம்.’ என்று பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வெச்சுட்டாராம். 
(நோ ஒர்ரி சிவா. ரஜினி இன்னும் பத்துப் பதினைந்து வருஷமாவது நடிப்பாரு. கீர்த்தி சுரேஷ் பேத்தி ஹீரோயினாகணுமில்லையா!)

*    என்னதான் சர்ச்சை மன்னனாக இருந்தாலும் கூட சிம்புவின் சம்பளம் உச்சத்தில்தான் இருக்கிறது. ‘எட்டு சி கேக்குறார்’ என்கிறது கோலிவுட் வட்டாரம். ஆனால் சமீபத்தில் அவர் கேமியோ பண்ணும் ‘மஹா’ படத்துக்கு ஒரு கோடி  கூட சம்பளமில்லை. டபுள் சம்மதம் சொல்லிட்டார் சிம்பு. காரணம், இந்த படத்தில் அவரை நடிக்க சொல்லி கேட்டது ஹன்ஸிகாதானே!
(மொத் மொத்ன்னு யாராச்சும் கேட்டாக்க, பொத்துன்னு விழுந்து ஓ.கே. சொல்லிடணும்)

*    லேட்டா துவங்கினாலும் லேட்டஸ்ட்டா இந்தியன் -2 செம்ம வேகமாக வளர்ந்து வருகிறது. சென்னை ஷூட்டிங் முடிச்சுட்டு ராஜ முந்திரி சிறையில் அடுத்த ஷெட்யூல் ஷூட்டிங்கில் இருக்கிறார் கமல்ஹாசன். விறுவிறுன்னு ஷூட்டை முடிச்சுட்டு அடுத்த படத்தை கையிலெடுக்கும் முடிவிலிருக்கிறாராம் கமல். 
(க்கும் ‘தலைவன் இருக்கிறான்’ படத்தை ஆரம்பிக்கலேன்னா லைக்கா கத்திய வெச்சுடுவான்ல)

*    பிகிலுக்குப் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் முடித்துவிட்டு அடுத்து பேரரசுவுடன் இணைகிறார் விஜய்! என்று ஒரு தகவல் பரவிக்கிடக்கிறது. இதைப் பார்த்துட்டு பலர் பதறிவிட்டனர். ‘ஏன் தலைவா இப்படியொரு முடிவு?’ என்று விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் ஓப்பனாய் கேட்டேவிட்டனர். விஜய்யோ சிரித்துவிட்டு மறுப்பது போல் தலையாட்டினாராம். அப்படின்னா அது பொய் தகவல்தானாம்!
(திருப்பாச்சி, சிவகாசி வரிசையில் ஒரு மரப்பாச்சியோ, கொட்டாச்சியோ வராமல் போனதில் தமிழ் சினிமா உலகம் தப்பிச்சது போங்கள்!)
*    நயன் தாரா கதையின் நாயகியாக நடிக்கும் படங்களில் அவரது ரியல் காதலர் விக்னேஷ் சிவனின் தலையீடு ஓவராய் இருந்தது என்பது நயனை இயக்கிய இயக்குநர்களின் கருத்து. சமீபத்தில் தனது சில படங்கள் தோற்றதால் ‘விக்கி நீ தள்ளி நில்லு’ என்று சொல்லிவிட்டாராம் தாரா. 
(பாஸு இப்பவாச்சும் உங்களுக்குன்னு ஒரு படம் பண்ணுங்க.)

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் - அவர் இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?
மாற்றப்படும் பராசக்தி ரிலீஸ் தேதி... ஜனநாயகனை காலி பண்ண என்னென்ன பண்றாங்க பாருங்க..!