
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் கலந்து கொள்ளும் தினங்களில், போட்டியாளர்களுக்கு கமல் என்ன கேள்வி கேட்க போகிறாரோ... என்ன தவறு செய்தோமோ என பக் பக் என இருந்தாலும், ரசிகர்கள் அவர் கேட்கும் கேள்விகளை மட்டும் அல்ல, ஹவுஸ் மெட்ஸ் சொல்லும் பதில்களையும் ரசிப்பார்கள்.
இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில், கவினிடம், லாஸ்லியா கீழே விழுந்ததற்கு உணர்ச்சிவச பட்டது குறித்து கேள்வி மேல் கேள்வி கேட்டு, அவரை பதில் சொல்ல முடியாத அளவிற்கு திணறடித்தார்.
இதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள மூன்றாது ப்ரோமோவில், சிக்கியது வேறு யாரும் இல்லை சாண்டி தான். அதாவது லாஸ்லியா கீழே விழுந்த பின் தான் அவரிடம் மன்னிப்பு கேட்டதாகவும். இதற்கு பிறகும் கவின் தன்னை திட்டுவது போல் பேசியது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்ததாக கூறுகிறார் சாண்டி.
இதை தொடர்ந்து பேசிய கமல் இந்த பிளவு ஏன் என கேட்க, மீண்டும் பேசிவிட்டதாக கமலுக்கு பதில் கூறுகிறார் சாண்டி. எங்க பேசுனீங்க என நக்கலாக கேட்கிறார் கமல். மேலும் கமல் கேட்கும் கேள்வியால் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களோ குஷியாக கை தட்டுகிறார்கள்.
இது குறித்த ப்ரோமோ காட்சி இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.