விஜய்யே கூப்பிட்டும் வரமுடியாது என அடம்பிடிக்கும் நடிகை நயன்தாரா...செய்வதறியாது திகைத்து நிற்கும் விக்னேஷ் சிவன்...

Published : Sep 13, 2019, 04:01 PM ISTUpdated : Sep 13, 2019, 09:25 PM IST
விஜய்யே கூப்பிட்டும்  வரமுடியாது என அடம்பிடிக்கும் நடிகை நயன்தாரா...செய்வதறியாது திகைத்து நிற்கும் விக்னேஷ் சிவன்...

சுருக்கம்

நடிகர் அஜீத் போலவே படங்களில் நடித்து முடிப்பதோடு என் வேலை ஓவர்.பட புரமோஷனுக்கெல்லாம் என்னை அழைக்கக்கூடாது என்று சமீபகாலமாக அடம்பிடிக்க ஆரம்பித்திருக்கும் நடிகை நயன்தாரா, ‘பிகில்’இசை வெளியீட்டு விஜயே அழைத்தும் வரவிருப்பமில்லை என்று பிடிவாதமாக இருப்பதாக செய்திகள் வருகின்றன.  

நடிகர் அஜீத் போலவே படங்களில் நடித்து முடிப்பதோடு என் வேலை ஓவர்.பட புரமோஷனுக்கெல்லாம் என்னை அழைக்கக்கூடாது என்று சமீபகாலமாக அடம்பிடிக்க ஆரம்பித்திருக்கும் நடிகை நயன்தாரா, ‘பிகில்’இசை வெளியீட்டு விஜயே அழைத்தும் வரவிருப்பமில்லை என்று பிடிவாதமாக இருப்பதாக செய்திகள் வருகின்றன.

தீபாவளிக்கு வெளியாக இருக்கும் விஜய்யின் ‘பிகில்’படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா’சர்கார்’படவிழா நடந்த அதே சாய்ராம் கல்லூரியில் வரும் 19ம் தேதி வியாழனன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானின் லைவ் இசை நிகழ்ச்சி நடக்கவுள்ள நிலையில் படத்தில் விஜய் பாடியுள்ள ‘வெறித்தனம்’பாடலைப் பாடுவது உறுதியாகியுள்ளது. தனது வழக்கமாக குட்டிக்கதைகளை மட்டும் கொஞ்சம் எடுத்துவிடப்போகும் விஜய் அந்த மேடையில் இம்முறை அரசியல் பேசுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.

இப்படி விழா ந்கழ்ச்சிகளை பிரம்மாண்டமாகத் திட்டமிட்டு வரும் தயாரிப்பு நிறுவனம் மற்ற படங்களுக்காக எடுத்திருக்கும் கொள்கையை கொஞ்சம் தளர்த்தி விட்டு ‘பிகில்’பட ஆடியோ விழாவில் கலந்துகொள்ளவேண்டும் என அழைப்பு விடுக்க ஒரு நொடி கூட யோசிக்காத நயன் ‘எனக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்த சிபட விழாவுக்கே போகவில்லை. அதனால் வற்புறுத்தவேண்டாம் என மறுத்துவிட்டாராம். அடுத்து பேசிய இயக்குநர் அட்லிக்கும் நயன் அதே பதிலைக் கூற இறுதியாக தளபதியையே களத்தில் இறக்கிப்பார்க்க அதுவும் படுதோல்வியில் முடிந்ததாம்.  தன்னை ஒரு ஆம்பளை அஜீத் என்று நினைத்துக்கொண்டே முன்னணி நடிகர்களையெல்லாம் நயன் பகைத்துக்கொள்வது கண்டு செய்வதறியாது திகைத்து நிற்கிறாராம் விக்னேஷ் சிவன்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீண்ட நாள் காதலரை கரம் பிடித்த நடிகைகள்; 2025 ல் திருமணம் செய்த நடிகைகளின் பட்டியல்!
பெண்களின் உடை குறித்து சிவாஜியின் கமெண்ட்ஸ்... சின்மயி, அனசுயா பதிலடி