யுவன்ஷங்கர் ராஜாவின் முதல் படத்தில் நடிக்கும் நயன்தாரா......!!!

 
Published : Nov 19, 2016, 09:55 AM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
யுவன்ஷங்கர் ராஜாவின் முதல் படத்தில் நடிக்கும் நயன்தாரா......!!!

சுருக்கம்

நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு  அவர் கலெக்டராக நடித்து வரும் 'அறம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவந்தது. 

இந்நிலையில் அவர் நடிக்கவுள்ள இன்னொரு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கையும் அந்த படத்தின் பட குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.
 
பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதிய க்ரைம் நாவலின் தலைப்பான 'கொலையுதிர்க்காலம்' என்பதுதான் நயன்தாராவின் அடுத்த பட டைட்டில். 

இந்த படத்தின் ஒரு சர்ப்பரைஸ் என்னவெனில் இந்த படத்தை இசையமைப்பாளர்  யுவன்ஷங்கர் ராஜா தயாரிக்கவுள்ளார். அவர் ஆரம்பித்துள்ள ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனத்தின் முதல்படம் இதுதான் என்பதும் இந்த படத்திற்கு அவர் இசையமைக்கவும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த படத்தை 'உன்னை போல் ஒருவன்', பில்லா 2' ஆகிய படங்களை இயக்கிய சக்ரிடோலட்டி இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் நயன்தாராவின் வாயை ஒரு முரட்டுக்கை அழுத்தி பிடித்துள்ளதால் இதுவொரு திகில் படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிச்சா சுதீப்பின் 'மார்க்' முதல் நாள் வசூல் எவ்வளவு? முழு விவரம்
டாப் 10 சீரியல்கள் : இந்த வாரம் அதிக TRP ரேட்டிங்கை வாரிசுருட்டியது எந்தெந்த தொடர்கள்?