சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் இணைந்த நயன்தாரா பட நடிகர்..! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

Published : Sep 01, 2021, 12:11 PM IST
சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் இணைந்த நயன்தாரா பட நடிகர்..! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

சுருக்கம்

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும், 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நயன்தாரா பட நடிகர் இணைந்துள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.  

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும், 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நயன்தாரா பட நடிகர் இணைந்துள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில், கடைசியாக சூரரை போற்று திரைப்படம் வெளியான நிலையில், இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து கமிட் ஆகியுள்ள படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில், சன் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. எனவே அடிக்கடி இந்த படம் குறித்த தகவலும் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது இந்த படத்தில், நயன்தாராவின் நெற்றிக்கண் பட நடிகர் இணைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் கெளதம் கார்த்தியின் சிறிய வயது கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான சரண் சக்தி தான் தற்போது  இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த 'வடசென்னை' படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தம்பியாகவும், நயன்தாராவின் 'நெற்றிக்கண்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் முதல் முறையாக நடித்து வருகிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக பல படங்களில் ஹீரோவாக நடித்த வினய் நடிக்கிறார். இமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்தில் நடித்து முடித்தவுடன், சூர்யா 'வாடி வாசல்' படத்தில் கவனம் செலுத்த உள்ளார். அதே போல் பல வருடங்கள் கழித்து மீண்டும் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி வரும் நிலையில், விரைவில் இது வழக்கம் போல் வதந்தியா? அல்லது இந்த தகவல் உண்மையாகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?