
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு கேரியர் பிரேக்காக அமைந்த படங்களில் முக்கிய இடம் பிடித்தது கோலமாவு கோகிலா. 2018ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு, ஜாக்குலின், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நயனை விரட்டி, விரட்டி காதலிக்கும் சூப்பர் பாயாக அந்தர் செய்திருந்தார் யோகிபாபு.
தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய உள்ளனர். ரேடியோ ஜாக்கியாக இருந்து இயக்குநராக அவதாரம் எடுக்க உள்ள மயூரா ராகவேந்திரா என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் சீரியல் நடிகை ரக்சிதா ராம் தான் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
தற்போது பிரபல நடிகைகளில் ஒருவராக இருக்கும் ரச்சிதா ராம் கைவசம் நான்கு படங்களை வைத்திருக்கிறார். வீரம், லில்லி, ஏப்ரல் மற்றும் டாலி ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் ரமேஷ் அரவிந்தின் 100 படம் தான். படத்தின் ரீமேக் உரிமையை லைகா நிறுவனத்திடம் பெறும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.