
சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நேற்று பூஜை போடப்பட்ட ‘நெற்றிக்கண்’நயன்தாராவின் 65 வது படம் என்ற தகவலையும் அவரே வெளியிட்டதால் லேடி சூப்பர் ஸ்டார் கடந்து வந்த கரடு முரடான பாதைகளுக்கு சில நெட்டிசன்கள் பின்னோக்கிப் பயணம் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதுபோல் எதற்காகவோ வெட்கப்பட்டுக்கொண்டு விக்னேஷ் சிவனின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளும் நயனின் நயனமான புகைப்படம் ஒன்றும் வைரலாகிவருகிறது.
2003ம் ஆண்டு வெளியான சத்யன் அந்திக்காடுவின் ‘மனசினக்கரே’தான் நயனின் முதல் படம். இப்படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்தார்.இதற்கடுத்து ஃபாசில் இயக்கத்திலும் ஷாஜி கைலாஷ் இயக்கத்திலும் அடுத்து இரண்டு படங்கள் நடித்த அவர் 2005ல் ஹரி இயக்கத்தில் சரத் ஜோடியாக ‘ஐயா’படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு வலது கால் எடுத்து வைத்தார். ஐயாவில் அம்மாவுக்கு சுமார் பேர்தான் என்றாலும் அதே ஆண்டில் வெளியான ‘சந்திரமுகி’அவரைக் கமர்சியலாகக் காப்பாற்றியது.ஆனால் அதே ஆண்டில் வெளியான ‘கஜினி’படத்தில் படு டம்மி கேரக்டரில் நடிக்கவைத்தார் இப்போதைய ‘தர்பார்’பட டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ்.
அடுத்த ஆண்டில் ‘வல்லவன்’படம் மூலம் சிம்புவால் மீடியாவில் மிக முக்கியத்துவம் பெற்ற நடிகையாகிறார். அடுத்து ‘ஈ’படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தர ஷங்கர்,ரஜினியின் ‘சிவாஜி’படத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு இறங்கி ஆடி மோசம் போகிறார்.அடுத்து அஜீத்தின் ‘பில்லா’படம் அவரை தூக்குகிறது.கூடவே வந்த ‘யாரடி நீ மோகினி’தமிழ் சினிமாவின் ஒரே மோகினி நயன் தான் என்று உரத்து அறிவிக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் வந்த ‘சத்யம்’,’ஏகன்’,’வில்லு’,என்று செம ஃப்ளாப் படங்கள். 2010 ல் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’,2011ல் ஸ்ரீ ராம ராஜ்யம்’ 2013ல் ’ராஜா ராணி’ என்று ‘விஸ்வாசம்’வரை வருஷக்கு ரெண்டு ஹிட் ரெண்டு ஃப்ளாப்புமாக தொடர்ந்து வரும் நயன் ஒரு வழியாக ‘நெற்றிக்கண்’ மூலம் 65 வது படத்தை எட்டியிருக்கிறார்.
கடந்த 17 ஆண்டுகளில் சூப்பர் ஸ்டார் படங்களில் நடிக்கும் அதே சமயத்தில் புதுமுகநாயகர்களுடன், தேவைப்பட்டால் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்கவும் கூட நயன் தயங்கியதில்லை என்பது அவரது ப்ளஸ் பாய்ண்ட். இன்னும் ஏழெட்டு ஆண்டுகளில் தனது 100வது படத்தில் அஜீத்,விஜயின் வாரிசுகளுடன் இவர் டூயட் பாடிக்கொண்டிருப்பதைப் பார்க்க நேர்ந்தாலும் ஆச்சர்யப்படத்தேவையில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.