சம்பள விஷயத்தில் உலகநாயகனையே பின்னுக்கு தள்ளிய நயன்தாரா?

Published : Dec 05, 2018, 07:29 PM IST
சம்பள விஷயத்தில் உலகநாயகனையே பின்னுக்கு தள்ளிய நயன்தாரா?

சுருக்கம்

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நயன்தாரா. இவரின் பெயருக்கு ஏற்ற போல் தொடர்ந்து இவர் கதாநாயகிக்கு முக்கியதுவம் கொடுத்து நடித்து வரும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதோடு வசூலிலும் சாதனை படைக்கிறது.

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நயன்தாரா. இவரின் பெயருக்கு ஏற்ற போல் தொடர்ந்து இவர் கதாநாயகிக்கு முக்கியதுவம் கொடுத்து நடித்து வரும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதோடு வசூலிலும் சாதனை படைக்கிறது.

இந்த வருடம் இவர் நடிப்பில்  வெளியான  'அறம்', 'கோலமாவு கோகிலா', 'இமைக்கா நொடிகள்' ஆகிய படங்கள் நயன்தாராவை வேல லெவலுக்கு கொண்டு சென்றது.

அதேபோல் நயன்தாரா தற்போது சம்பளத்தையும் உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. இது கோலிவுட் நடிகைகள் பெரும் சம்பளத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிக்கை அதிக சம்பளம் பெரும் இந்திய பிரபலங்களின் டாப் 100 பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2018ஆம் ஆண்டின் பட்டியல் தற்போது வந்துள்ளது. இந்த பட்டியலில் நயன்தாரா 69வது இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு இந்த ஆண்டு 15.17 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் சல்மான்கான், விராத் கோஹ்லி, அக்சயகுமார், தீபிகா படுகோன் மற்றும் தோனி ஆகியோர் உள்ளனர். 

மேலும் இந்த பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான் 11வது இடத்திலும், ரஜினிகாந்த் 14வது இடத்திலும், விஜய் 26வது இடத்திலும், விக்ரம் 29வது இடத்திலும், சூர்யா 34வது இடத்திலும், தனுஷ் 53வது இடத்திலும், கமல்ஹாசன் 71வது இடத்திலும் உள்ளனர். இதன் படி பார்த்தல் சம்பள விஷயத்தில் கோலிவுட் நடிகைகள் யாரும் இடம்பெற வில்லை. அதே போல் 69 இடத்தை பிடித்து உலகநாயகன் கமல்ஹாசனை பின்னுக்கு தள்ளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கட்டுக்கடங்காத கூட்டம்... சில்மிஷம் செய்த ரசிகர்கள் - கடவுளே என கதறிய நிதி அகர்வால் - வீடியோ இதோ
மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்.. கேள்வி கேட்பான்.. ஈரோட்டில் கர்ஜித்த விஜய்