மூக்குத்தி அம்மன் நயன்தாரா... பகவதி அம்மன் கோவிலில் காதலருடன் சாமி தரிசனம்... வைரலாகும் போட்டோஸ்...!

Published : Dec 10, 2019, 12:58 PM IST
மூக்குத்தி அம்மன் நயன்தாரா... பகவதி அம்மன் கோவிலில் காதலருடன் சாமி தரிசனம்... வைரலாகும் போட்டோஸ்...!

சுருக்கம்

இந்நிலையில் கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் காதலர் விக்னேஷ்சிவன் உடன் சாமி தரிசனம் செய்துள்ளார் நயன். 

ஆர்.ஜே.பாலாஜி கதை, வசனம் எழுதியுள்ள "மூக்குத்தி அம்மன்" படத்தில் நடிக்க உள்ளார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. மூக்குத்தி அம்மனாக நடிப்பதால் நயன்தாரா, விரதம் இருப்பதாக ஆர்.ஜே.பாலாஜி அறிவித்திருந்தார். ஐசரி கணேசனின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்க உள்ள இப்படத்தின் பூஜை கடந்த 29ம் தேதி நடைபெற்றது. அதில் ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி, இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் நடந்த பூஜையில் பங்கேற்காமல் வழக்கம் போல, நயன்தாரா  எஸ்கேப் ஆனார். இதனிடையே அம்மனாக வேடமிட்டு நடிக்க உள்ள நயன், பூஜைக்கே வரலைன்னா எப்படி என ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். 

இந்நிலையில் கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் காதலர் விக்னேஷ்சிவன் உடன் சாமி தரிசனம் செய்துள்ளார் நயன். "மூக்குத்தி அம்மன்" படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது. அதற்காக அங்கு சென்ற நயன்தாரா முதல் வேலையாக பகவதி அம்மனை தரிசித்துள்ளார். நேற்று இரவு காதலர் விக்னேஷ் சிவன் உடன் பகவதி அம்மன் கோவிலுக்கு வந்த நயன்தாராவை கோவில்  நிர்வாகிகள் உரிய மரியாதை உடன் அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்ய வைத்தனர். 

சத்தமே இல்லாமல் நயன்தாரா கோவிலுக்குச் சென்றிருந்தாலும், அந்த செய்தி எப்படியோ ரசிகர்கள் காதுகளை எட்டியது. அதனால் நயனை காண்பதற்காக அவரது ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு குவியத் தொடங்கினர்.

எனவே போலீசார் பாதுகாப்புடன் சென்ற நயன்தாரா, விரைவாக சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். நயன்தாரா, விக்னேஷ் சிவன் உடன் பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?