என்கவுண்டர்களை கொண்டாட முடியாது..!! அது மகிழ்ச்சியான விஷயம் அல்ல, நடிகை சமந்தா அதிரடி..!!

Published : Dec 10, 2019, 12:36 PM IST
என்கவுண்டர்களை கொண்டாட முடியாது..!! அது மகிழ்ச்சியான விஷயம் அல்ல, நடிகை சமந்தா அதிரடி..!!

சுருக்கம்

 பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக இவ்வளவு காலம் காத்திருக்க கூடாது .  அதே நேரத்தில் இது போன்ற என் கவுண்டர்களை கொண்டாடவும் நான் விரும்பவில்லை ,  அதற்கு என்கவுண்டர்கள் மகிழ்ச்சியான விஷயமும் அல்ல

என்கவுண்டர் கொண்டாடக் கூடிய வகையில் அது மகிழ்ச்சியான விஷயம் இல்லை என நடிகை சமந்தா கருத்து தெரிவித்துள்ளார்.  நீண்ட மவுனத்திற்கு பிறகு நடிகை சமந்தா தெலுங்கானா  என்கவுண்டர் குறித்து கருத்து  தெரிவித்துள்ளார் .  தெலுங்கானா என்கவுண்டர் குறித்தும் பலாத்கார சம்பவம் குறித்தும் நடிகை சமந்தா வெளிப்படையாகப் பேசவில்லை என அவர் மீது கடுமையான விமர்சனங்கள்  எழுந்தது .  சமூக வலைதளத்திலும் பலர் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வந்தனர். 

இந்நிலையில் இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார் சமந்தா ,  அதில் இந்த சம்பவம் நடந்த போது அதுபற்றி நான் எதுவுமே கூறவில்லை,  பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது இரங்கலை தெரிவிக்கவில்லை , என்று குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொரு செய்தியும் எனக்கு வந்தது .  ஒரு டுவிட் செய்து விட்டால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நேர்ந்த குற்ற உணர்விலிருந்து அது நம்மை விடுவித்து விடாது  என  குறிப்பிட்டுள்ளார் .   ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம் பெண்கள் ஏழைகள் ஏழை எளிய குழந்தைகளுக்கு உதவி வருகிறார் சமாந்தா , ஆனால்  இது பற்றி அவர் பேசவில்லை என்பதுதான் அவர் மீது எழுந்த விமர்சனத்திற்கு காரணம் .  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,  இந்த என்கவுண்டர் மகிழ்ச்சி அளிக்கிறது என்று சொல்வது தவறு. மாறாஎ  பயம்தான் அதிகரித்திருக்கிறது .

 

நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 3 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ,  இந்த சம்பவம் நமது நீதித்துறை மற்றும் சட்ட அமைப்புக்கு நீதிகளை விரைந்து வழங்க வேண்டும் என்ற விழிப்புணர்வுக்கான அழைப்பாக நிச்சயம் இருக்கும்  என நான் நம்புகிறேன் .  பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக இவ்வளவு காலம் காத்திருக்க கூடாது .  அதே நேரத்தில் இது போன்ற என் கவுண்டர்களை கொண்டாடவும் நான் விரும்பவில்லை ,  அதற்கு என்கவுண்டர்கள் மகிழ்ச்சியான விஷயமும் அல்ல என அவர் கருத்து தெரிவித்துள்ளார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!
கதறி அழும் விசாலாட்சி; ஆறுதல் சொல்லும் மருமகள்; குணசேகரின் கேம் இஸ் ஓவர் என்று பேசும் ஜனனி: எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்!