டைல்ஸ் பதித்ததால் என் தாய்மாமனை இழந்துவிட்டேன்... சோகத்தில் நடிகர் நட்டி நட்ராஜ்

By Ganesh AFirst Published Aug 31, 2022, 1:04 PM IST
Highlights

Natty Nataraj : தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நட்டி நட்ராஜ், தனது தாய்மாமனின் இறப்பு குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக வலம் வந்தவர் நட்டி நட்ராஜ். பல்வேறு வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள இவர், கடந்த 2014-ம் ஆண்டு எச்.வினோத் இயக்கத்தில் வெளியான சதுரங்க வேட்டை படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தில் இவரது வித்தியாசமான நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்ததோடு படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசான நம்ம வீட்டு பிள்ளை படத்தின் மூலம் வில்லனாக அவதாரம் எடுத்தார் நட்டி. இதையடுத்து தனுஷின் கர்ணன் படத்தில் வில்லத்தனமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார். இதனால் இவருக்கு அடுத்தடுத்து வில்லன் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... விஜய்க்கு மட்டும் அம்மாவாக நடிக்காதது ஏன்? - உண்மையை ஓப்பனாக போட்டுடைத்த சரண்யா பொன்வண்ணன்

Tiles.. இது முதியோர்களின் எதிரி.. சமீபத்தில் எனது தாய் மாமனை இழந்து விட்டேன்.. காரணம் குளித்துவிட்டு வந்த உடன் கால் வழுக்கி கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிர் இழந்தார்..நம்முடய கௌரவம் tiles ல் இல்லை.நம் முதியோர்களை காப்பதில் இருப்பது..🙏🙏

— N.Nataraja Subramani (@natty_nataraj)

தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடித்து வருகிறார் நட்ராஜ். அதேபோல் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நாயகனாக நடிக்கும் பகாசூரன் படத்திலும் நெகடிவ் ரோல் ஏற்று நடித்து இருக்கிறாராம் நட்டி. இதுதவிர இன்பினிட்டி, வெப், சம்பவம் போன்ற திரைப்படங்களில் நாயகனாகவும் நடிக்கிறார்.

இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் நட்டி நட்ராஜ், தனது தாய்மாமனின் இறப்பு குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள டுவிட்டில், “Tiles.. இது முதியோர்களின் எதிரி.. சமீபத்தில் எனது தாய் மாமனை இழந்து விட்டேன்.. காரணம் குளித்துவிட்டு வந்த உடன் கால் வழுக்கி கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிர் இழந்தார்.. நம்முடய கௌரவம் tiles ல் இல்லை. நம் முதியோர்களை காப்பதில் இருப்பது” என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... 'நட்சத்திரம் நகர்கிறது' படம் எப்படி இருக்கு? ஷார்ட் விமர்சனம் இதோ..

click me!