திரையுலகை உலுக்கிய சோகம்..! 2 தேசிய விருது வாங்கிய பிரபலம் மரணம்.!

Published : Oct 13, 2023, 10:55 AM IST
திரையுலகை உலுக்கிய சோகம்..! 2 தேசிய விருது வாங்கிய பிரபலம் மரணம்.!

சுருக்கம்

கடந்த ஒரு வாரமாக, வயது மூப்பு காரணமாக கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல தயாரிப்பாளர் பிவி கங்காதரன் காலமானார்.  

பிரபல தொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான பி.வி.கங்காதரன், கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு காரணமாக ஏற்படும் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார். மேலும் இவரின் உடல்நிலை மிகவும் மோசமானதால் ஒரு வாரத்துக்கும் மேலாக கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை (அக்.13), அதாவது இன்று காலை 6 மணியளவில் காலமானார். 

இவர் கிரஹலட்சுமி புரொடக்‌ஷன்ஸ் என்கிற பெயரில் புரோடக்ஷன் என்கிற 20க்கும் மேற்பட்ட பல மலையாள  படங்களை தயாரித்துள்ளார். 'ஒரு வடக்கன் வீரகதா', 'அசுவிண்டே அம்மா', 'தூவல் கொட்டாரம்' மற்றும் போன்ற படங்கள் இவர் தயாரிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பபட்ட சமந்தா.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!

80 வயதாகும் இவர், ஒரு தொழிலதிபர், தயாரிப்பாளர் என்பதை தாண்டி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2011ல் கோழிக்கோடு வடக்கு தொகுதியில் இருந்து சட்டப் பேரவைக்கு போட்டியிட்டார். மேலும் மாத்ருபூமியின் இயக்குநராகவும் சில வருடங்கள் இருந்தார்  அதே போல் ஒரு தயாரிப்பாளராக, அவர் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளையும் ஐந்து கேரள மாநில விருதுகளையும் வென்றுள்ளார். இவரின் பிள்ளைகளான ஷேனுகா ஜெய்திலக், ஷெக்னா விஜில் மற்றும் ஷெர்கா சந்தீப் ஆகியோரும் திரைப்படத்துறையில் பணியாற்றி வருகின்றனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தயாரிப்பாளர் பிவி கங்காதரனின் மரணம், தற்போது மலையாள திரையுலகை சேர்ந்த ரசிகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பலர் இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருவதோடு, இவரின் குடும்பத்தினருக்கு தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!
அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!