
குஜராத் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் இரண்டாவது பெரிய அணையை பிரதமர் மோடி வரும் 17-ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
நர்மதை நதி
குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைக்கு நாட்டின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1961-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். இந்த அணை நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது மத்தியப்பிரதேச மாநில எல்லையில் உள்ளது. சர்தார் சரோவர் அணைக்காக குஜராத், மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் வீடுகளையும் சொத்துக்களையும் இழந்தனர்.
இழப்பீடு
அடிக்கல் நாட்டிய போது, “இந்த அணைத் திட்டத்துக்காக வீடுகளோடு சேர்த்து நிலங்களை அளித்த ஆறு கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும் முழுமையான வாழ்வாதார இழப்பீடு அளித்து நியாயம் வழங்க வேண்டும்’’ என்று நேரு கூறி இருந்தார்.
ஆனால், மக்களுக்கு இழப்பீடு வழங்கப்படாததால் பல போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதனால் அணையின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்த பிறகு பணி மீண்டும் தொடங்கப்பட்டது.
உலகிலேயே 2-வது பெரிய அணை
நர்மதா கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக அனைத்து கதவுகளையும் மூடுமாறு உத்தரவிட்டிருந்தது. கதவுகள் மூடப்பட்டதும், அணையின் உயரம் மற்றும் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டது. தற்சமயம் அணையின் உயரம் 138 மீட்டர் மற்றும் கொள்ளளவு 4.73 மில்லியன் கனமீட்டர் ஆகும். இது உலகிலேயே இரண்டாவது பெரிய அணையாகும்.
பிறந்தநாள் பரிசு
அணையின் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் வரும் 17-ம் தேதி அணையை மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிப்பார் மோடியின் பிறந்த நாளான அன்று அவருக்கு வழங்கப்படும் பரிசு என
என முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
3 மாநில மக்கள்
இந்த அணையின் மூலம் 18 லட்சம் ஹெக்டேர் அளவிலான விவசாய நிலங்கள் பயன் பெறும் என கூறினார். மேலும் அணையில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு நீர் மின் நிலையங்கள் மூலம் 4141 கோடி யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படும். அதனால் மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெறுவார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.