
ஆர் ஜே பாலாஜிக்கு அப்பா ஆனார் நாஞ்சில் சம்பத்..!
ஆர்ஜே பாலாஜியின் முழுக்க முழுக்க அரசியல் காமெடி கலந்த படமாக எடுக்கப்பட்டு வருகிறது "எல்கே ஜி"
இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க பிரபு என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். பிரியா ஆனந்த் கதாநாயகி. இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு தந்தையாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் நாஞ்சில் சம்பத்.
இந்த படத்தில் நாஞ்சில் சம்பத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.அதாவது அரசியல் வாதியாக நடிக்கிறார்.
நாஞ்சில் சம்பத் இதற்கு முன்னதாக மதிமுகவில் வைகோ உடன் நெருங்கிய தொடர்பில் இருந்து கட்சின் பணியில் சிறப்பாக செயல்பட்டவர்
பின்னர் அங்கிருந்து பிரிந்து வந்து, அதிமுகவில் இணைத்தார். அவருக்கு ஜெயலலிதா இன்னோவா கார் கூட பரிசாக அளித்தார்.
பின்னர் அவர் இறந்தவுடன் சசிகலா கேட்டதன் பேரில் காரை மீண்டும் அவரிடம் ஒப்படைத்து விட்டார். பின்னர் அவர்கள் சொல்வதை கேட்கும் பிள்ளையாக மாறிய காரணத்தினால் மீண்டும் அவருக்கு இன்னோவா கார் வழங்கப்பட்டது
இதெலாம் ஒரு பக்கம் இருக்க, தினகரனுக்கு பெரும் ஆதரவாக இருந்து வந்த நாஞ்சில் சம்பத், அவர் புதியதாக தொடங்கிய கட்சியில் திராவிடம் இல்லை என்று கூறி அங்கிருந்தும் வெளியில் வந்து விட்டார்
தற்போதைக்கு நிஜ வாழ்க்கை அரசியலுக்கு இடைவெளி விட்டுள்ள நாஞ்சில் சம்பத் சினிமாவில் அரசியல் வாதியாக களம் இறங்கி உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.