
பரபரப்பான அரசியல் சூழலில் படத்தில் நடிக்கிறார் நாஞ்சில் சம்பத்..! என்ன ரோல்னு தெரிஞ்சா அசந்துடுவீங்க..!
ஆர்ஜே பாலாஜி மற்றும் பிரியா ஆனந்த் நடிக்க இருக்கும் அரசியல் படத்திற்கு எல்கேஜி என பெயரிடப்பட்டு உள்ளது
இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் பற்றி விரிவாக அலசுகிறது. அதில் குறிப்பாக அரசியை பற்றி பயங்கரமாக கிண்டல் செய்வதாக அமைய உள்ளது என கூறப் படுகிறது
இதெலாம் ஒரு பக்கம் இருக்க .... பரபரப்புக்கு பெயர்போன நாஞ்சில் சம்பத் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இருக்கிறார் என பேச்சுவார்த்தை அடிபட்டது.
ஆனால் அது உண்மையா இல்லையா என்பதை ஆராய்வதற்கு முன்பாக தற்போது இந்த படத்தில் கமிட் ஆகி இருப்பதை பார்த்தல் இனி சினிமா களத்தில் ஒரு கை பார்க்க உள்ளார் நாஞ்சில் சம்பத் என நினைக்க வைக்கிறது
எல்.கே.ஜி. என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க பிரபு என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். பிரியா ஆனந்த் கதாநாயகி. இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு தந்தையாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் நாஞ்சில் சம்பத்.
நிஜ வாழ்க்கையில் அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் படத்திலும் அரசியல்வாதியாகவே வருகிறார். நடப்பு அரசியலை முழுக்க முழுக்க கிண்டல் செய்யும் படமாக தயாராகிறது எல்.கே.ஜி.
நாஞ்சில் சம்பத்துக்கு இதற்கு முன்பே சில படங்களில் நடிக்க அழைப்பு வந்தது. பெரிய இயக்குனர்கள் அழைத்த போதே அரிதாரம் பூச மாட்டேன் என்று சொல்லி மறுத்தவர் இவர்
நிஜ வாழ்கையில் தான் அரசியல்வாதி என்றால்,சினிமாவில் அரசியல் வாதியாக வலம் வரும் நாஞ்சில் சம்பத்திற்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.