
Ileana Dcruz Welcomes Second Baby : நடிகை இலியானா தான் மீண்டும் தாயாகி உள்ளதாக அறிவித்துள்ளார்.. குழந்தை பிறந்து 9 நாட்களுக்குப் பிறகு, இந்தச் செய்தியை அவர் தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 2025-ம் ஆண்டு ஜூன் 19ந் தேதி அன்று தனக்கு குழந்தை பிறந்ததாக அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'நண்பன்' படத்தில் நடித்த இவர், தனது இரண்டாவது மகனுக்கு கீனு ரஃபே டோலன் என்று பெயரிட்டுள்ளார். இதற்கு திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தனது மகனின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள இலியானா, "எங்கள் இதயங்கள் நிறைந்துள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார். இலியானாவின் இந்தப் பதிவைப் பார்த்த நடிகைகள் பிரியங்கா சோப்ரா, மலைகா அரோரா, அதியா ஷெட்டி, மற்றும் பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த பதிவில் கீழ் ரசிகர் ஒருவர், இலியானா "கர்ப்பமாக இருந்தாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். "இரண்டாவது குழந்தைக்கு வாழ்த்துக்கள்" என்று ஏராளமான ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நடிகை இலியானா கடந்த 2023ம் ஆண்டு மைக்கேல் டோலனை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவரை திருமணம் செய்து கொள்ளும் முன்னரே இருவரும் லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வந்தனர். அப்போது இலியானா கர்ப்பமானார் இவருக்கு, 2023 ம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் முதல் மகன் பிறந்தார். அவருக்கு கோவா பீனிக்ஸ் டோலன் என்று பெயரிட்டார். மகன் பிறந்து இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது, மீண்டும் ஒரு ஆண்குழந்தையை பெற்றெடுத்துள்ளார் நடிகை இலியானா.
இலியானா தமிழில் கேடி என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து, இந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளில் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து பான் இந்தியா அளவில் பிசியான ஹீரோயினாக வலம் வந்தார் இலியானா. தமிழிலும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் இலியானா. இதையடுத்து வெளிநாட்டை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவரை காதலித்தார். அந்தக் காதல் தோல்வியில் முடிந்ததால் மன அழுத்தத்தில் இருந்த இலியானா போதைக்கு அடிமையாகினார். இதன் காரணமாக உடல் எடையும் அதிகரித்ததால் அவருக்கு சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின்னர் மைக்கெல் டோலனை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.