
கஷ்டத்தை தூக்கிட்டு அதற்கு பக்கத்தில் நஷ்டத்தை வைத்த கதையாக இருக்கிறது சிம்புவின் தாயார் உஷா கொடுக்கும் ஆலோசனை.
இதனை தவிர்க்க வேண்டும் என ஆரம்ப கட்டத்திலேயே அலற ஆரம்பித்துவிட்டது தமிழ் திரையுலகம். சிம்புவின் பெயரை சொல்லி நாலாபுறத்திலும் அட்வான்ஸ் வாங்கிப் போட்ட உஷா ராஜேந்தர் தம்பதி, கால்ஷீட்டும் கொடுக்காமல் கரன்ஸியையும் திருப்பித்தராமல் செய்து வரும் நடவடிக்கைகளுக்கு அளவில்லாமல் போயிவிட்டது.
முதலைக்குட்டி விழுங்கிய தவளைக்குஞ்சு போல தங்கள் பணத்தை படக் படக்கென செரிக்கக் கொடுத்துவிட்டு தவிக்கும் தயாரிப்பாளர்களுக்கு உஷா தரப்பில் இருந்து சொல்லப்படும் அதிர்ச்சி தகவல் என்னவென்றால் “ சிம்பு அட்வான்ஸ் வாங்கிய படங்களில் அவருக்கு பதில் குறளரசனை வைத்து அந்தப்படங்களை எடுங்களேன்!” எனக் கூறியிருக்கிறார் உஷா.
இதனை கேட்ட சம்பந்தப்பட்ட திரையுலகினர், இதென்னய்யா..? நயன் தாராவுக்கு பதில் நமீதாவை வைத்துக் கூட படமெடுக்கலாம். சிம்புவுக்கு பதில் குறளரசனை வைத்து எப்படி சமாளிப்பது என அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கும் கோடம்பாக்கம், எந்த நேரத்திலும் மிருகம் துரத்தும் என்கிற அச்சத்திலேயே தவித்து வருகிறது. உஷா மாஎடம் வர்றாங்க உஷாரு..!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.