
பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களின் ஓட்டுகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்ட, அபிராமி, மோகன் வைத்தியா, மற்றும் சாக்ஷி ஆகிய மூவரும் தற்போது மீண்டும் சிறப்பு விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர்.
ஏற்கனவே இவர்களை போலவே விருந்தினராக உள்ள வந்த வனிதா, பின் வைல்ட் கார்டு எண்ட்ரி என்று அறிவிக்கப்பட்டார். வெளியே சென்ற வனிதா மீண்டும் வந்து ஆட்டம் போடுவதையே சக போட்டியாளர்களால் சமாளிக்க முடியாத நிலையில், தற்போது உள்ள வந்துள்ள யாரவது வைல்ட் கார்டு என்று அறிவித்து விடுவாரோ பிக்பாஸ் என்கிற பயத்தையும் மற்ற ஹவுஸ் மேட்ஸ் முகத்தில் பார்க்கமுடிகிறது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், மோகன் வைத்தியா மற்றும் சாக்ஷி இருவரும் பழிவாங்கும் எண்ணத்துடன் தான் வந்திருப்பதாக சாண்டி, கவின், தர்ஷன் ஆகியோர் வெளியில் அமர்ந்து பேசிகொண்டுள்ளனர்.
அபிராமி தான் ஜாலி செய்ய மட்டுமே வந்ததாக கூறுகிறார். அது தங்களுக்கும் தெரியும் என கூறுகிறார் சாண்டி. மற்றொரு புறம் சாக்ஷி மற்றும் மோகன் ஆகியோர் தனியாக அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருக்கும் காட்சி காட்டப்படுகிறது. அபிராமியும் இவர்கள் இருவரும் ப்ரீ பிளான் போட்டு பழிவாங்க வந்துள்ளனர் என்பது போல் கூறுகிறார். இன்று ஏதேனும் புதிய பிரச்சனை வெடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும், கவினை பற்றி மோசமாக விமர்சித்து பேசிய சாக்ஷி, கவினிடம் நேருக்கு நேர், அவருடைய மனதில் உள்ள கேள்விகளை கேட்பாரா... என்பதே ரசிகர்கள் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.