
தமிழகத்தை தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின், அதிமுக கட்சி ஆட்சிசெய்து வருகிறது. இந்த ஆட்சி முடிவடைய இன்னும் ஒன்றரை வருடங்கள் மட்டுமே உள்ளது. எனினும் தற்போது தமிழக அரசியலில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையால் அடுத்தது, தமிழகத்தை ஆளபோவது யார் என்பதை கணிக்க முடியாமல் உள்ளது.
மேலும், தமிழக அரசியலில் இடம் பிடிக்க, ரஜினி, கமல், உள்ளிட்ட பிரபலங்களும் போட்டி போட்டு வருகிறார்கள். இந்நிலையில் கேரளாவை சேர்ந்த ஜோதிடர் ஒருவர் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் ஆட்சியை பிடிப்பர் என கூறி அதிரவைத்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த மாதவ நம்பூதிரி என்பவர் அஷ்ட மங்கள தேவ ப்ரசன்னம் போட்டுப் பார்ப்பதில் வல்லவர். அவர் அஷ்ட மங்கள தேவ ப்ரசன்னம் போட்டு பார்த்ததில் எட்டு வகையான மங்களப் பொருட்கள் வைத்து, ஒரு பெண் குழந்தை மீது அம்மனை வர வைத்து, ப்ரசன்னம் பார்த்து, நடக்கப் போவதை முன் கூட்டியே கணித்து சொல்கிறார்.
இதை எப்போதாவது முக்கிய விஷயங்களுக்கு மட்டுமே பார்ப்பார்களாம். தமிழகத்தில் வரும் சட்டசசபை தேர்தலில், ரஜினிகாந்த் அசூர மெஜாரிட்டியுடன் தமிழக வரலாற்றிலேயே எதிர் கட்சி என்பதே இல்லாமல் முழு பலத்துடன் சிறப்பாக தமிழகத்தை ஆளுவார் என கூறியுள்ளார் அந்த ஜோதிடர்.
மேலும் உலகப் புகழ் பெரும் அளவுக்கு, ஆட்சி செய்வார். அடுத்து பத்து வருடங்கள் வரும் சட்டசபை தேர்தலில் கூட அவரே தான் முழு மெஜாரிடியுடன் தான் வெற்றி பெறுவார். என ப்ரசன்னம் வந்திருக்கிறது. இதை கேரளத்தின் பிரபல ஜோதிடர், உண்ணி கிருஷ்ணப் பணிக்கரும் ஆமோதித்திருக்கிறார்.
ரஜினிகாந்த் தான் அடுத்த முறை ஆட்சியை பிடிப்பர் என கேரளா ஜோதிடர் சொல்லி இருப்பது, ரஜினி ரசிகர்களை மகிழ்வித்திருந்தாலும், நெட்டிசன்கள் பலர் விமர்சனமும் செய்து வருகிறார்கள். எது எப்படி இருந்தாலும், எதிர்காலத்தில் யார் ஆட்சியை பிடிப்பர் என்பது ஒரு சில வருடங்களில் தெரிந்துவிடும் என்பதே நிதர்சனமான உண்மை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.