மச்சான்ஸ் நமிதாவின் மெஹந்தி நிகழ்ச்சி... குவியும் வாழ்த்து!

 
Published : Nov 22, 2017, 05:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
மச்சான்ஸ் நமிதாவின் மெஹந்தி நிகழ்ச்சி... குவியும் வாழ்த்து!

சுருக்கம்

namitha mehanthi function

'எங்கள் அண்ணா' படத்தின் மூலம் 2004 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகம் கொடுத்தவர் நடிகை நமீதா.  இந்தப் படத்தைத் தொடர்ந்து சரத்குமாருடன் ஏய், அஜித்துடன் பில்லா, விஜயுடன் அழகிய தமிழ் மகன் போன்ற 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக உடல் எடை அதிகரித்த காரணத்தால் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் சின்னத்திரை பக்கம் ஒதுங்கிய இவர், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார்.  மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார்.

இந்நிலையில் மோகன் லால் நடித்து மலையாளத்தில் வெளியான புலிமுருகன் படத்தில் உடல் எடையைக் குறைத்துக்கொண்டு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த இவர், தொடர்ந்து படங்களில் நடிப்பார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் திடீர் என தன்னுடைய திருமண செய்தியை கூறி அனைத்து ரசிகர்களுக்கும் ஷாக் கொடுத்தார்.

மேலும் இவர் தன்னுடன் 'மியாவ்' படத்தில் நடித்த வீரா என்பவரைக் காதலித்து கரம் பிடிக்க உள்ளார். இவர்களுடைய திருமணம் திருப்பதியில் நாளை காலை நடைபெற உள்ளது. இன்று இவருக்கு மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இவருடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

நடிகை நமீதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடியபோது, இவருடைய ஒரு சில குணங்கள் பிடிக்காததால் விமர்சித்து வந்த பல ரசிகர்கள் தற்போது இவருக்கு தொடர்ந்து ட்விட்டர் மூலம் திருமண வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஷாருக்கானுக்கு இப்படி ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறதா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!
2025-ல் பாக்ஸ் ஆபிஸ் குயின் யார்? அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 5 ஹீரோயின்ஸ் இதோ