
எங்கள் அண்ணா, ஏய், பம்பரக்கண்ணாலே, போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நமீதா... அதிலும் இவர் மச்சான்ஸ் என்று அழைக்கும் வார்த்தைக்கே இவருக்கு பல இளைஞர்கள் ரசிகர்களாகி விடுவார்கள்.
கடந்த சில வருடங்களாக அளவுக்கு அதிகமாக உடல் எடை கூடியதால் இவருக்கு எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது ஓரளவுக்கு எடையை குறைத்துக்கொண்டு மீண்டும் தமிழில் பொட்டு படத்தின் மூலமும் மலையாளத்தில் புலிமுருகன் படத்தின் மூலமும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
மேலும் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டு, ஒரு சில விஷயங்கள் இவரிடம் பிடிக்காததால் மக்களின் ஆதரவு இல்லாமல் எலிமினேட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இவருக்கும் மூத்த நடிகர் சரத் பாபுவிற்கும் திருமணம் என்று கொளுத்தி போட்டுள்ளது தெலுங்கு ஊடகங்கள்.
இது குறித்து சரத் பாபு கூறுகையில், இந்த வதந்தி கடந்த 8 ஆண்டுகளாக இருந்து வருகிறது. நான் அவரை எப்போது படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தேனோ அப்போது தொடங்கிய வதந்தி இன்னும் முடிவிற்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இது போன்ற வதந்திகளை பரப்பி பல ஊடகங்கள் மற்றும் நாளிதழ்கள் தன்னுடைய பேருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் கோபமாக கூறியுள்ளார். ஆனால் இது குறித்து நமீதா எந்த ஒரு தகவலையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.