
நடிகர் நாகசைதன்யா, இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் இணைந்திருக்கும் தன்னுடைய 'NC22' படத்தின் படப்பிடிப்பை துவக்கி இருக்கிறார். இந்தப் படம் நாகசைதன்யாவின் முதல் தமிழ்-தெலுங்கு பைலிங்குவலாக இருக்கும். அதேபோல, இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கும் இதுதான் முதல் தெலுங்கு படம். இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
ஸ்ரீனிவாசா சித்தூரி 'ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனர்'ரின் கீழ் இந்தப் படத்தை தயாரிக்கிறார். படத்தில் இன்னொரு நல்ல செய்தி 'மாஸ்ட்ரோ' இளையராஜாவும், 'லிட்டில் மாஸ்ட்ரோ' யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ஒரு படத்தின் ஆல்பத்தில் பணிபுரிவது இதுவே முதல்முறை. நடிகர் நாகசைதன்யா இதுவரை கதாநாயகனாக நடித்த படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட் கொண்ட படமாக உருவாகிறது.
மேலும் செய்திகள்: 'வெண்ணிலா கபடிக்குழு' நடிகரின் பரிதாப நிலை! 6 மாசம் தான் உயிருடன் இருப்பாரா? கண் கலங்க வைத்த பேட்டி!
அழகான காட்சிகளை படமாக்குவதில் திறமையான ஒளிப்பதிவாளரான SR கதிர் இந்தப் படத்தில் இணைகிறார். படத்தின் வசனத்தை அபூரி ரவி எழுதுகிறார். படத்தின் எடிட்டிங்கை வெங்கட் ராஜன் கையாள்கிறார். தயாரிப்பு வடிவமைப்பிற்காக படக்குழு திறமை மிக்கவரான ராஜீவை தேர்வு செய்துள்ளது. கலை இயக்கத்தை சத்யநாராயணா கையாள உள்ளார். முக்கிய சண்டைக் காட்சிகளை படமாக்குவதற்காக சர்வதேச ஆக்ஷன் இயக்குநரான யானிக் பென் இதில் இணைந்துள்ளார். அதேபோல, மகேஷ் மாத்யூவும் 'NC22'-ல் அங்கமாக உள்ளார்.
மேலும் செய்திகள்: 'புஷ்பா 2' படத்தில் சமந்தா வாய்ப்பை தட்டி தூக்கிய 48 வயது கவர்ச்சி புயல்! காத்திருக்கும் கவர்ச்சி விருந்து!
படத்தின் தொழில்நுட்பக் குழு தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள விவரங்கள் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும். ஆக்ஷன்- எண்டர்டெயினராக மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படம் தயாராக இருக்கிறது. பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.