நடிகர் சங்க தேர்தல் நிறுத்துவது ஏன்? பதிவாளர் அறிக்கையில் உள்ள அதிரடி காரணங்கள்!

By manimegalai aFirst Published Jun 19, 2019, 12:39 PM IST
Highlights

நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், தற்போது நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளதாக தென் சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் அதிரடியாக கூறியுள்ளார்.
 

நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், தற்போது நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளதாக தென் சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் அதிரடியாக கூறியுள்ளார்.

நடிகர் சங்க தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 2015 ஆம் ஆண்டு, நடைபெற தேர்தலில் நாசர் தலைமையிலான 'பாண்டவர் அணியினர்' வெற்றி பெற்றனர். ஏற்கனவே இவர்களுடைய பதவி காலம் கடந்த வருடம் அக்டோபர் மாதம் முடிவடைந்து விட்ட நிலையில், நடிகர் சங்க கட்டிடம் பணிகள் உள்ளதால், மேலும் 6 மாதம் பதவி காலத்தை நீக்க வேண்டும் என பொது குழு கூடி முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் நடிகர் சங்க தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.  இதில் மீண்டும் 'பாண்டவர் அணியினர் போட்டியிட உள்ளனர். இவர்களுக்கு எதிராக நடிகர் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி போட்டியிட உள்ளனர்.

இந்நிலையில் இந்த தேர்தல் நிறுத்துவது என்? என்பது குறித்து தென் சென்னை சங்க பதிவாளர் கொடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது, என்னவென்றால் தொழில் முறையில் உள்ள 44  உறுப்பினர்களை, தொழில் முறை அற்றவர்கள் என அவர்களுடைய வாக்குரிமை பறிக்கப்பட்டதாக பதிவாளர் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதே போல் பதவி காலம் ஏப்ரல் மாதமே, முடிந்து விட்ட நிலையில், மீண்டும் தேர்தல் நடத்தாமல் உள்ளது குறித்து கூறியுள்ளனர். 

click me!