நடிகர் சங்க தேர்தல் ரத்து ..! அனைத்து சங்க பதிவாளர் அதிரடி உத்தரவு..!

By ezhil mozhiFirst Published Jun 19, 2019, 12:19 PM IST
Highlights

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நிறுத்த அனைத்து சங்க சங்கங்களின் பதிவாளர் உத்தரவை பிறப்பித்து உள்ளார்.
 

நடிகர் சங்க தேர்தல் ரத்து ..! அனைத்து சங்க பதிவாளர் அதிரடி உத்தரவு..! தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நிறுத்த அனைத்து சங்க சங்கங்களின் பதிவாளர் உத்தரவை பிறப்பித்து உள்ளார். தேர்தலில் குளறுபடிகள் உள்ளதால் தேர்தலை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்து உள்ளார். 

வரும் 23 ஆம் தேதி  தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவதக  இருந்தது. இந்த தேர்தலில் பாண்டவர் அணிக்கு எதிராக சுவாமி சங்கரதாஸ் அணியினர் களமிறங்கினர். நடிகர் பாக்யராக் தலைமையிலான சங்கர தாஸ் அணியினர் மிகவும் மும்முரமாக தேத்ல் வேலைகளில் செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில், 61 வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கி விட்டதாக குற்றசாட்டு எழுந்தது. 

இதன் அடிப்படையிலேயே, தேர்தலில் குளறுபடிகள் உள்ளதால் தேர்தலை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் பதிவாளர் தெரிவித்து உள்ளார். தேர்தல் ரத்து என்ற செய்தி அனைத்து நடிகர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தவிர, ‘நடிகர் சங்கத் தேர்தலை விட பொதுமக்கள் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம் எனவே தேர்தல் நடைபெறவிரு[ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள ஜானகி எம்ஜியார் கல்லூரியில் வாக்குப்பதிவு நடத்த அனுமதி இல்லை என்றும் ஈசிஆர், ஓஎம் ஆர் போன்ற போக்குவரத்து தொந்தரவு அற்ற பகுதிகளில் நடத்திக்கொள்ளுமாறும் சென்னை உயர்நீதி மன்றம் திட்டவட்டமாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

கோர்டின் இந்தத் தீர்ப்பு தேர்தலில் பங்குபெறும் இரு அணிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஜானகி எம்ஜிஆர் கல்லூரியில் தேர்தல் நடந்தால் பாதுகாப்பு தரமுடியாது என்று காவல் துறையினர் ஏற்கனவே கைவிரித்திருந்த நிலையில், இந்த குறைந்த கால இடைவெளியில் வேறு இடம் பார்த்து தேர்தலை அதே தேதியில் நடத்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது. இதற்கிடையில், நடிகர் சங்க தேர்தல் ரத்து என அனைத்து சங்க பதிவாளர் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளார். 

click me!