நடிகர் சங்க ஆவணங்கள் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பு...விஷால் போட்டியில்லை?...

By Muthurama LingamFirst Published May 17, 2019, 1:49 PM IST
Highlights

மிக விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதால் நடிகர் சங்க தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து ஆவணங்கள் அனைத்தும் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் விஷால் போட்டியிடுகிறாரா இல்லையா என்பது இதுவரை சஸ்பென்சாக உள்ளது. 
 

மிக விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதால் நடிகர் சங்க தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து ஆவணங்கள் அனைத்தும் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் விஷால் போட்டியிடுகிறாரா இல்லையா என்பது இதுவரை சஸ்பென்சாக உள்ளது. 

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான ஆவணங்களை ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி ஈ.பத்மநாபனிடம் நடிகர் சங்கத் தலைவர் நாசர் ஒப்படைத்தார். 2019 – 2022 ஆண்டுகளுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற அவசர செயற்குழு கூட்டத்தில் தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி ஈ.பத்மநாபன் நியமிக்கப்படுவார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சங்கத்தின் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்க அவரும் ஒப்புதல் அளித்திருந்தார். தேர்தல் தேதியையும் விரைவில் அவர் அறிவிப்பார். 

இந்நிலையில் நேற்று காலை தேர்தல் நடத்துவது தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி ஈ.பத்மநாபன் அவர்களிடம் நடிகர் சங்கத் தலைவர் நாசர் ஒப்படைத்துள்ளார். அந்த ஆவணங்களை அவர் ஏற்றுக் கொண்டதோடு விரைவில் தேர்தல் அலுவலகத்தை பார்வையிட உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்து தேர்தல் விதிமுறைகள் அனைத்தும் அமலுக்கு வந்துள்ளது.

தேர்தல் தேதி இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் விஷால் அணியில் அவரைத்தவிர அனைவரும் போட்டியிடுவார்கள் என்று தெரிகிறது. 

click me!