ஊஊ ஊஊ ஊத்திக்கிட்ட சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல்! ஹேப்பியில் துள்ளி குதிக்கும் முன்னணி ஹீரோக்கள்!!

Published : May 17, 2019, 01:45 PM IST
ஊஊ ஊஊ ஊத்திக்கிட்ட சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல்! ஹேப்பியில் துள்ளி குதிக்கும் முன்னணி ஹீரோக்கள்!!

சுருக்கம்

தமிழ்சினிமாவில் சிவகார்த்திகேயனின் திடீர் பிக் - அப்பும் தாறுமாறான வளர்ச்சியும் கோடம்பாக்கத்து ஹீரோக்கள் பலரை மிக கடுமையாக மனதளவிலும், தொழில் ரீதியிலும், வசூல் ரீதியிலும் பாதித்திருந்தது. ஆனால் சிவகார்த்தி தற்போது ஹாட்ரிக்காய் சறுக்கிவிட, இன்று பிற்பகலிலேயே ‘மிதப்பு’ பார்ட்டியில் தங்கள் நண்பர் குலாமோடு குஷியாகிவிட்டனர் பொறாமையில் நொந்து கொண்டிருந்த ஹீரோக்கள். 

தமிழ்சினிமாவில் சிவகார்த்திகேயனின் திடீர் பிக் - அப்பும் தாறுமாறான வளர்ச்சியும் கோடம்பாக்கத்து ஹீரோக்கள் பலரை மிக கடுமையாக  மனதளவிலும், தொழில் ரீதியிலும், வசூல் ரீதியிலும் பாதித்திருந்தது. ஆனால் சிவகார்த்தி தற்போது ஹாட்ரிக்காய் சறுக்கிவிட, இன்று பிற்பகலிலேயே ‘மிதப்பு’ பார்ட்டியில் தங்கள் நண்பர் குலாமோடு குஷியாகிவிட்டனர் பொறாமையில் நொந்து கொண்டிருந்த ஹீரோக்கள். 

தனியார் சேனல் ஒன்றில் ‘ஸ்டாண்ட் அப் காமெடியன்’ ஆகத்தான் தனது மீடியா வாழ்க்கையை துவக்கினார் சிவகார்த்திகேயன். பின் அதே சேனலில் தனியாக ஷோக்கள் செய்யுமளவுக்கு உயர்ந்தார். அதேநேரத்தில் சினிமாவிலும் வாய்ப்பு தேடி முயன்றார். 2010 வாக்கில் இயக்குநர் பாண்டிராஜின் கண்ணில் விழ, ‘மெரீனா’வில் ஹீரோவானார். இந்தப் படத்தில் சிவா ஹீரோவா இல்லை அதில் நடித்திருந்த சின்ன பசங்க ஹீரோக்களா எனுமளவுக்குதான் இருந்தது. 

இதற்குள் தனுஷின் ‘3’ படத்தில் சைடு ரோலில் நடித்திருக்க, அதன் மூலம் அவரது நெருங்கிய நண்பரானார். இயக்குநர் எழிலின் ‘மனம் கொத்தி பறவை’ சிவகார்த்தியை காமெடியில் கலக்கும் இளம் ஹீரோவாக அடையாளப்படுத்தியது. அதன் பின் அதே பாண்டி ராஜின் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’வில் கமிட் ஆனார். தன்னை விட பல படிகள் முன்னிலையிலிருந்த விமலை விட தனக்கு அதிக விளம்பரங்கள் அந்தப் படத்துக்கு கொடுக்கப்பட, அதை கெட்டியாய் பிடித்துக் கொண்டு முன்னேறினார். விளைவு, தனுஷின் ‘வுண்டர் பார்’ தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘எதிர்நீச்சல்’ மூலம் சிவகார்த்திக்கு சிங்கிள் ஜனரஞ்சக ஹீரோ அந்தஸ்து கிடைத்தது. எல்லா ஆடியன்ஸுக்கும் பிடித்த ஹீரோவாக சிவகார்த்தி உருவாகி வருவதை பல ஹீரோக்கள் விரும்பவில்லை. தனுஷுக்கே போன் போட்டு ’நம்ம இண்டஸ்ட்ரி இருக்கிற நிலையில புதுசா ஏன் பிரதர் நீங்களே போட்டியாளுங்களை உருவாக்குறீங்க?’ என கொதித்தனர். ஆனாலும் தனுஷ் - சிவகார்த்தி நட்பு மிக நெருக்கமாய் தொடர்ந்தது. இதற்குள் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் அதிரிபுதிரி வெற்றியின் மூலம் எங்கோ உச்சம் தொட்டார் சிவகார்த்தி. 

இதன் பின் மீண்டும் தனுஷின் தயாரிப்பில் ’காக்கிச்சட்டை’ அவருக்கு ஆக்‌ஷன் ஹீரோ அந்தஸ்தை வழங்க முனைந்தது. ஆனால் இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகாததோடு, இவர்களின் நட்பிலும் பிரிவை உண்டாக்கியது. இதன் பின் தன் ஆஸ்தான இயக்குநர் பொன்ராமின் இயக்கத்தில் ரஜினி முருகன், ரெமோ என்று வேகம் காட்டினார் சிவகார்த்தி. படங்கள் பெரிதாய் ஹிட் ஆகாவிட்டாலும் வசூல் மன்னனாய் பார்க்கப்பட்டார். இது மற்ற ஹீரோக்களை மிக கடுமையாய் எரிசலூட்டிக் கொண்டே இருந்தது. 

இந்நிலையில் மோகன் ராஜாவின் ‘வேலைக்காரன்’ படத்தில் சிவகார்த்தி கமிட் ஆனதும், அதுவும் ஜோடி ‘நயன் தாரா’ என்றதும் பல ஹீரோக்களின் தூக்கம் பஸ்பமானது. கோபத்தின் உச்சம் தொட்டார்கள். இப்படியாக பல ஹீரோக்களின் வயிற்றெரிச்சலுக்கு மத்தியில்தான் சிவகார்த்தியின் கிராப் வளர்ந்தது. மிக சிறப்பான மெசேஜை தாங்கி வந்த வேலைக்காரன் படம் ஓரளவு வசூலை கொடுத்தாலும் கூட ‘டாகுமெண்ட்ரி டைப் படம்’ என்று பெயர் வாங்கியது. 

அதன் பிறகு பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ஜனரஞ்சக  சீமராஜாவும் ஊத்திக் கொண்டது. அடுத்தடுத்து சறுக்கல்கள் சிவகார்த்தியை தளர வைத்தன. ஆனாலும் மனம் தளராமல் அவர் தயாரித்த ‘கனா’ படம் கதை மற்றும் மேக்கிங்குக்காக ஹிட்டடித்தது. அதில் அவர் செய்திருந்த கெஸ்ட்ரோல் ஓரளவு பேசப்பட்டது. 

இந்நிலையில், இயக்குநர் ராஜேஷ்.எம். இயக்கத்தில் சிவகார்த்தியுடன் மீண்டும் நயன் ஜோடி போட்டிருக்கும், ‘மிஸ்டர் லோக்கல்’ இன்று ரிலீஸானது. ஓப்பனிங் ஷோவை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலர் சோஷியல் மீடியாவில் ‘மொக்கை! சிவா ஏமாத்திட்டார்!’ என்றெல்லாம் விமர்சித்துக் கொட்டுகின்றனர்.

இந்தப் படம் ‘ஊத்தல்’ என்று வரும் விமர்சனத்தைப் பார்த்து, சிவகார்த்தியின் வளர்ச்சியால் மனம் நொந்து  கிடந்த ஹீரோக்கள் ஏக குஷியாகியுள்ளனர். தங்கள் நண்பர்கள் குலாமை கூப்பிட்டு மதியத்திற்கு முன்னதாகவே ‘தீர்த்த பார்ட்டி’யில் பிஸியாகிவிட்டனர்.  
என்ன உலகம் டா!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜயை பாஜகவிடம் மாட்டிவிட்ட ஆதவ்..! தவெகவில் வெடித்த பிரளயம்.. வீணாய்ப்போன அரசியல் எதிர்காலம்
Actor Vidyut Jammwal : உடம்புல பிட்டு துணி கூட இல்லாம விஜய், அஜித் பட வில்லன் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ!