naai sekar release date : வலிமை இடத்தை நிரப்ப வரிசை கட்டும் படங்கள்..நாய் சேகரும் அதே நாளில் தான் ரிலீஸாம்..

By Kanmani PFirst Published Jan 11, 2022, 4:37 PM IST
Highlights

naai sekar release date : சதீஸ் நாயகனாக நடிக்கும் நாய் சேகர் படம் வரும் ஜனவரி 13-ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 

மீண்டும் அதிகரித்த கொரோனா தோற்றால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ரமாண்ட படைப்புகளான ஆர்ஆர்ஆர், வலிமை , ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்கள் ஜனவரி வெளியீட்டிலிருந்து ஒதுங்கி விட்டன. இந்த தருணத்தை சிறு பட்ஜெட் படங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள முனைப்பு காட்டி வருகிறது. அந்தவகையில் வலிமை ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட ஜனவரி 13-ம் தேதியில் அஸ்வினின் "என்ன சொல்ல போகிறாய்" படம் ரிலீஸ் ஆகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல நாய் சேகர் படமும் ஜனவரி 13-ம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இதுவரை நகைச்சுவை வேடங்களுக்கு பெயர் பெற்ற சதீஷ், நாய் சேகர் படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும் குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லட்சுமி இந்த படத்தின் வாயிலாக வெள்ளித்திரையில் அறிமுகமாகி, சதீஷின் ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாய் கேரக்டருக்கு மிர்ச்சி சிவா டப்பிங் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. மொத்த டப்பிங்கையும் 3 மணி நேரத்தில் அவர் முடித்து கொடுத்துள்ளார். 

500 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள சங்கர் கணேஷ் இப்படத்தின் எதிர் நாயகனாக நடித்துள்ளார். ஜார்ஜ் மரியன், 'லொள்ளு சபா' மாறன், இளவரசு, லிவிங்ஸ்டன், மனோபாலா, ஞானசம்பந்தம் மற்றும் 'கலக்கப் போவது யாரு' பாலா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும். இயக்குநர் கிஷோர் ராஜ்குமாரும் ஒரு சுவாரஸ்யமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்ய, ராம் பாண்டியன் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். எம் ஜி முருகன் இப்படத்தின் கலை இயக்குநர் ஆவார். பாடல்களை சிவகார்த்திகேயன், விவேக் மற்றும் இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் ஆகியோர் எழுதியுள்ளனர். 

படத்தின் பாடல்களுக்கு அஜீஷும் சிறப்பு பாடல் ஒன்றுக்கு அனிருத் ரவிச்சந்தரும் இசையமைத்துள்ளனர். நடனத்தை சாண்டியும் சண்டைக்காட்சிகளை மிராக்கல் மைக்கேலும் வடிவமைத்துள்ளனர். படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் எஸ் எம் வெங்கட் மாணிக்கம், கிரயேட்டிவ் ப்ரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி. 

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பேனரில் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் தயாரித்துள்ள, கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கிய 'நாய் சேகர்' திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

click me!