மிஷ்கினின் ‘பிசாசு 2’ பட ஷூட்டிங் நிலை என்ன?... வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்!

By Kanimozhi Pannerselvam  |  First Published Sep 1, 2021, 3:52 PM IST

திண்டுக்கல்லில் 3 கட்டமாக நடைபெற்ற ‘பிசாசு 2’ படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்தது.



ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் ‘பிசாசு 2’ திரைப்படத்தை வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்குகின்றார்.  கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்க உடன் பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். 

Latest Videos

திண்டுக்கல்லில் 3 கட்டமாக நடைபெற்ற ‘பிசாசு 2’ படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்தது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து இயக்குனர் மிஷ்கின் அனைவரின் ஒத்துழைப்பிற்கு தனது அன்பை தெரிவித்து வாழ்த்துக்களை கூறினார். 


பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்க சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். திரையரங்குகளில் ‘பிசாசு 2’ வெளியாகும் என்று கூறிய தயாரிப்பு தரப்பு விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது.

click me!