Myna : கஷ்டப்பட்டு நடிச்ச சீனெல்லாம் கத்திரி போட்டு தூக்கிட்டாங்க... லோகேஷ் கனகராஜ் மீது அதிருப்தியில் மைனா

By Asianet Tamil cinema  |  First Published Jun 10, 2022, 3:17 PM IST

Myna Nandhini : விஜய் சேதுபதியின் மனைவிகளில் ஒருவராக நடித்திருந்த மைனா நந்தினி, இப்படத்தில் தான் நடித்த காட்சிகள் ஏராளமானவை கத்திரி போட்டு தூக்கப்பட்டு உள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ளார்.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மல்டிவெர்ஸ் படமாக வெளியாகி இருந்த படம் விக்ரம். கமல்ஹாசன் தயாரித்து நடித்திருந்த இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. அனிருத் இசையமைத்திருந்த இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

கடந்த ஜூன் 3-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாக வெளியான இப்படம் உலகளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரே வாரத்தில் ரூ.250 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வரும் விக்ரம் திரைப்படம் பல்வேறு சாதனைகளையும் படைத்து வருகிறது.

Tap to resize

Latest Videos

இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சந்தனம் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவருக்கு 3 மனைவிகள். அந்த ரோலில் நடிகைகள் சிவானி, மைனா, மகேஸ்வரி ஆகியோர் நடித்திருந்தனர். சின்னத்திரையில் இவர்கள் பிரபலமானவர்களாக இருந்தாலும் இப்படத்தில் இவர்களுக்கு மிக சிறிய ரோல் தான் வழங்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதியின் மனைவிகளில் ஒருவராக நடித்திருந்த மைனா நந்தினி, இப்படத்தில் தான் நடித்த காட்சிகள் ஏராளமானவை கத்திரி போட்டு தூக்கப்பட்டு உள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் நடித்த இரண்டு சீன்கள் மட்டுமே படத்தில் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Vikram BoxOffice : தமிழகத்தில் மட்டும் 100... ஆண்டவர் படு ஜோரு - அசர வைக்கும் விக்ரமின் புது வசூல் சாதனை

click me!