
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது நாளான இன்று, போட்டியாளர் சாக்ஷி அகர்வால், பொங்கல் என்னால் மீண்டும் சாப்பிட முடியாது என, கூறினார். இந்த சம்பவம் முதல் ப்ரோமோவில் காட்டப்பட்டது.
இதைதொடர்ந்து வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில், ரசிகர்கள் மனதை நெகிழ வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ள, பிரபல இசை வித்வான் மோகன் வைத்யா, கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சி இடம் பெற்றுள்ளது. " இதுகுறித்து அவர் பேசுகையில் தன்னுடைய வாழ்க்கையில் அன்பு என்பது தனக்கு கிடைக்கவே இல்லை என்றும், எதுவுமே தனக்கு நிலையாக கிடைக்கவில்லை என அழுதபடி கூறுகிறார்.
இதற்காகவே இந்த நிகழ்ச்சியில் வர வேண்டும் என்று ஆசைப்பட்டு வந்ததாக மோகன் வைத்தியா தெரிவிக்கிறார். இதன் மூலமாவது தனக்கு ஒரு குடும்பம் கிடைக்க வேண்டும் என நினைத்ததாக கூறும் காட்சி, பார்ப்பவர்கள் மனதை உருக்கும் விதமாக உள்ளது. இதை கேட்டு அங்கிருந்த போட்டியாளர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.