இவர் கதாநாயகனாவது இந்த பிரபஞ்சத்தின் கட்டளையாம்...என்ன கொடுமை சரவணா இது?...

Published : Jul 24, 2019, 11:12 AM IST
இவர் கதாநாயகனாவது இந்த பிரபஞ்சத்தின் கட்டளையாம்...என்ன கொடுமை சரவணா இது?...

சுருக்கம்

திரையுலகில் இசையமைப்பாளராக வேண்டும் என்கிற வேட்கையில் இசை பயின்று ஓரிரு படங்களுக்கு இசையமைத்த  ஏ.எல்.சூர்யா விரைவில் கதாநாயகன் அவதாரம் எடுக்கப்போவது மட்டுமின்றி தான் கதாநாயகனாகவேண்டுமென்பது இப்பிரபஞ்சத்தி கட்டளை என்று பெரிய கப்ஸா ஒன்றையும் விடுகிறார்.


திரையுலகில் இசையமைப்பாளராக வேண்டும் என்கிற வேட்கையில் இசை பயின்று ஓரிரு படங்களுக்கு இசையமைத்த  ஏ.எல்.சூர்யா விரைவில் கதாநாயகன் அவதாரம் எடுக்கப்போவது மட்டுமின்றி தான் கதாநாயகனாகவேண்டுமென்பது இப்பிரபஞ்சத்தி கட்டளை என்று பெரிய கப்ஸா ஒன்றையும் விடுகிறார்.

சில வருடங்களுக்கு முன் இசையமைப்பாளராகும் முயற்சியிலிருந்த ஏ.எல்.சூர்யாவுக்கு அப்படி ஒரு ராசி. அவர் இசையமைத்த அப்படங்கள்  எதுவுமே வெளியாகவில்லை. அதனால் மனவேதனை.ஆனால் அவர் சோர்ந்துவிடவில்லை. தம் உழைப்பால், தன்னம்பிக்கை சொற்பொழிவாளராக உயர்ந்தார். அவரால் ஏராளமானோர் பயனடைந்தனர்.தம் உள்ளுணர்வின் உந்துதலில் ஒவ்வொரு செயலையும் செய்வதாகச் சொல்லும் அவருக்கு, ஒருநாள் நடிகை ஸ்ரேயாவுடன் காதல்பாடல் பாடுவது போலக் கனவு வந்ததாம்.

உடனே தன் எண்ணங்களை எழுத்தாக்கினார். அது அனிதா பத்மா பிருந்தா எனும் பெயரில் 560 பக்கங்கள் கொண்ட நாவலாக விரிந்தது.அந்த நாவலை அப்படியே திரைப்படமாக்கும் முயற்சியில் இப்போது ஈடுபட்டிருக்கிறார்.கனவில் கண்டது போல், ஸ்ரேயாவை நாயகியாக்கிவிடுவது எனும் முயற்சியில் இருக்கிறார். ஸ்ரேயா மட்டுமின்றி பூர்ணா,பூனம்பாஜ்வா ஆகியோரையும் ஒப்பந்தம் செய்யவிருப்பதாகச் சொல்கிறார்கள்.தன்னுடைய பி பாசிட்டிவ் நிறுவனம் சார்பாக ஏ.எல்.சூர்யாவே தயாரிக்கவிருக்கும் இப்படம் விரைவில் தொடங்கவிருக்கிறதாம்.

நாயகனாக நடிக்க வேண்டும் என்கிற ஆசைக்காகவே நாவல் எழுதினீர்களா? என்று கேட்டால், நான் நாயகனாக நடிப்பதென்பது இப்பிரபஞ்சம் விடுக்கும் கட்டளை, என் விருப்பு வெறுப்பை மீறி அது கட்டாயம் நடக்கும் என்கிறார் உறுதியாக. ஏ.எல்.சூர்யா, ’ஆழ்மனமும் அதன் அபரிமித ரகசியங்களும்’, ’பணமே...பணமே...ஓடி வா’, ’பேராற்றல் படைத்தவர்களே...எழுந்திருங்கள்’, ‘கோடிக்கணக்கான ரூபாயை ஆழ்மனதை இயக்கி அடைவது எப்படி?’ ஆகிய நூல்களை எழுதி இலக்கிய உலகில் பிரபலமானவராக திகழ்வதோடு, தனது மோட்டிவேஷன் வீட்டியோக்கள் மூலம் யூடியூபில் பிரபலமானவராக இருக்கிறார்.பி பாசிட்டிவ் என்ற தனது யூடியூப் சேனல் மூலம் இவர் வெளியிட்டிருக்கும் சுமார் 200 க்கும் மேற்பட்ட வீட்டியோக்கள் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. இவரை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கையும் பல லட்சங்களாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!