முன்னாள் பாஜக எம்.பி.,யுடன் மோதும் சூர்யா..!

Published : Jul 24, 2019, 10:47 AM ISTUpdated : Jul 24, 2019, 10:52 AM IST
முன்னாள் பாஜக எம்.பி.,யுடன் மோதும் சூர்யா..!

சுருக்கம்

 பாஜகவை சேர்ந்த பரேஷ் ராவல், 2014 -2019 எம்பியாக பணியாற்றியவர். தேசிய விருது பெற்றுள்ளார்.

என்.ஜி.கே. படத்தை அடுத்து சூர்யா கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘காப்பான்'. இந்த படத்தில் சாயிஷா, ஆர்யா,  மலையாள நடிகர் மோகன்லால் இன்னும் பலர் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 30ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தை அடுத்து சூர்யா, சுதா கொங்காரா இயக்கும் சூரரைப்போற்று படத்தில் நடித்து வருகிறார்.
 
ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் இணையும் நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் பட்டியல் தமிழில் இருந்து பாலிவுட் வரை நீள்கிறது.
 
இணை தயாரிப்பாளராக குனித் மொங்கா இணைந்துள்ளார். இவர் சர்வதேச அளவில் விருதுகள் வென்ற பல படங்களின் இணைத் தயாரிப்பாளர் ஆவார். ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு சண்டைக்காட்சிகளை வடிவமைக்கும் கிரேக்பவல் படக்குழுவில் இணைந்துள்ளார்.
 அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில், இந்தி நடிகர் பரேஷ் ராவல் வில்லன் நடிகராக இணைந்துள்ளார் என செய்திகள் வெளியாகி வருகிறது. 80களில் இந்தித் திரையுலகில் அறிமுகமான பரேஷ் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும்.

பாஜகவை சேர்ந்த பரேஷ் ராவல், 2014 -2019 எம்பியாக பணியாற்றியவர். தேசிய விருது பெற்றுள்ளார். இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்படவில்லை. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!