‘டங்கல்’ திரைப்பட நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலதிபர் கைது!

 
Published : Dec 11, 2017, 06:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
‘டங்கல்’ திரைப்பட நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலதிபர் கைது!

சுருக்கம்

Mumbai Businessman Arrested For Allegedly Molesting Teen Actress On Flight

டங்கல் திரைப்பட நடிகை சாய்ரா வாசிமுக்கு விமானத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்த 39 வயது தொழிலதிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் மீதுபோஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் தொந்தரவு

‘டங்கல்’ திரைப்படத்தில் நடித்துள்ளவர் சாய்ரா வாசிம்(வயது 17). இவர் தனது தாயுடன், டெல்லியில் இருந்து மும்பைக்கு விஸ்தாரா விமானத்தில் சனிக்கிழமை இரவு பயணம் செய்தார். அப்போது, சாய்ராவின் இருக்கைக்கு பின்னால் அமர்ந்திருந்த சக பயணி ஒருவர் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அந்த நபர் தனது காலால் சாய்ராவின் முதுகு, தோள், பின்புறம் ஆகியவற்றை தொட்டு அவரை துன்புறுத்தியுள்ளார்.

கண்ணீருடன் புகார்

மும்பை விமானநிலையத்தில் இறங்கியதும் சாய்ரா தனது இன்ஸ்டாகிராம்பக்கத்தில், தனக்கு நேர்ந்த துன்பத்தை கண்ணீருடன் பகிர்ந்துகொண்டார். தன்னிடம் வரம்பு மீறி நடந்து கொண்ட நபரை கண்டித்தும், அந்த நபர் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக சாய்ரா கண்ணீருடன் தெரிவித்தார்.

போஸ்கோவில் வழக்கு

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதையடுத்து, மஹாராஷ்டிராமகளிர் ஆணையம், உடனடியாக மும்பை போலீசார் விரைந்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதையடுத்து, சாய்ரா தங்கி இருந்த ஓட்டலுக்கு சென்ற மும்பை போலீசார், அவரிடம் புகாரைப் பெற்று, போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணை

அதன்பின் சாய்ரா பயணம் செய்த விஸ்தாரா விமான நிறுவனத்திடம் விசாரணை செய்த போலீசார், சாய்ராவின் இருக்கைக்கு பின்னால் அமர்ந்திருந்த பயணி குறித்த விவரங்களைப் பெற்றனர்.

கைது

மும்பை காண்டிவாலி பகுதியில் தங்கி இருந்த தொழிலதிபர் விகாஸ்சச்தேவ்(வயது39) சாய்ராவிடம் தவறாக நடந்துள்ளார் என்பதை கண்டுபிடித்த, போலீசார் அங்கு சென்று அவரைக் கைது செய்தனர்.

உள்நோக்கம் இல்லை

இது குறித்து மும்பை போலீஸ் துணை ஆணையர் அணில் கும்பரே  கூறுகையில், “சச்தேவ் நேற்றுமுன்தினம் மாலை அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தி, சாய்ராவிடம் தவறாக நடந்தவர் அவர்தான் என்பதை உறுதி செய்தோம்.

விசாரணையில், டெல்லியில் ஒரு இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டு,மும்பைக்கு சச்தேவ் திரும்பியுள்ளார். இரு நாட்களாக ஓய்வின்றி, தூக்கமின்றி இருந்ததால், விமானத்தில் அயர்ந்து தூங்கிவிட்டதாகவும், சாய்ரா மீது கால்பட்டது உள்நோக்கத்தில் இல்லை. சாய்ரா மீது கால்பட்டதும் அவரிடம் தான் மன்னிப்பும் கேட்டுவிட்டேன் எனக் கூறினார்’’ எனத் தெரிவித்தனர்.

விஸ்தாரா அறிக்கை

இதற்கிடையே  சாய்ரா விவகாரம் தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருவதாக விஸ்தாரா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மும்பை போலீசார் கேட்ட விவரங்களை ஏற்கனவே அளித்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அதன் அறிக்கையை விமானப் போக்குவரத்து இயக்குநரிடம் அளிப்போம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் பறக்க தடை?

மத்திய விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா ராஞ்சி நகருக்கு சென்றிருந்தார். அப்போது இது தொடர்பாக நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அவர் பதில் அளிக்கையில், “ விஸ்தாரா நிறுவனத்தின் விசாரமைக்கு நடிகை ஒத்துழைப்பு  அளிக்க வேண்டும். நடிகையிடம் சக பயணி தவறாக நடந்தது உறுதி செய்யப்பட்டால், அந்த பயணி எந்த விமானத்திலும் பயணிக்க தடை விதிக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி
டிரக் டிரைவராக இருந்த அவதார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்... பில்லியனர் இயக்குனர் ஆனது எப்படி?