‘ நடிகை பாலியல் துன்புறுத்தல் விளம்பரத்துக்காக நடந்தது’! கைதான தொழிலதிபர் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு

 
Published : Dec 11, 2017, 06:13 PM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
‘ நடிகை பாலியல் துன்புறுத்தல் விளம்பரத்துக்காக நடந்தது’! கைதான தொழிலதிபர் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு

சுருக்கம்

Actress Zaira Wasim Sexual Harassment Came for Promotion The arrest of the detained businessman wife

டங்கல் திரைப்பட நடிகை சாய்ரா வாசிம் விமானத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட நிகழ்வு என்பது விளம்பரத்துக்காக நடத்தப்பட்டது என்று இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

‘டங்கல்’ திரைப்படத்தில் நடித்துள்ளவர் சாய்ரா வாசிம்(வயது 17). இவர் தனது தாயுடன், டெல்லியில் இருந்து மும்பைக்கு விஸ்தாரா விமானத்தில் சனிக்கிழமை இரவு பயணம் செய்தார். அப்போது, சாய்ராவின் இருக்கைக்கு பின்னால் அமர்ந்திருந்த சக பயணி ஒருவர் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அந்த நபர் தனது காலால் சாய்ராவின் முதுகு, தோள், பின்புறம் ஆகியவற்றை தொட்டு அவரை துன்புறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சாய்ராவுக்கு பின் இருக்கையில் பயணம் செய்த மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் விகாஷை(வயது39)போலீசார் கைது செய்தனர். அவர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகை சாய்ராவை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தொழிலதிபர் விகாஸ் கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் மனைவி அளித்த பேட்டியில் கூறுகையில், “  "என் கணவர் சமூதாயத்தில் ஒரு நல்ல இடத்தில் இருக்கும் தொழிலதிபர். என் தந்தை ஓய்வுபெற்ற ராணுவ வீரர். எங்கள் நெருங்கிய உறவினரின் இறுதிச்சடங்கிற்காக தான் என் கணவர் டெல்லியிலிருந்து மும்பை பயணித்தார். இறுதிச்சடங்குக்கு வருகிறார். சோகமான மனநிலையில் இருக்கும் அவர் மீது இப்படி ஒரு பழி சுமத்துவது அதிர்ச்சியளிக்கிறது.

 நடிகையுடன் அவரின் தாயும் பயணம்செய்திருக்கிறார். அப்படி இருக்கும்போது, என் கணவர் தவறாக நடந்துகொள்ளும்போது அவரை ஏன் தாக்கவில்லை, கூச்சல் எழுப்பவில்லை... அலாரம் பட்டனை அழுத்தவில்லை... இரண்டு மணி நேரம் கழித்து சமூக வலைதளங்களில் பதிந்தது ஏன்? இது முழுக்கமுழுக்க விளம்பரத்துக்காகச் செய்தது' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

நெட்டிசன்கள் பாய்ச்சல்

விகாஸின் மனைவிக்கு பதிலளிக்கும் விதமாக நெட்டிசன்கள் கொந்தளித்துவருகின்றனர். பாலியல் தொந்தரவுக்குள்ளாகும் பெரும்பாலான பெண்கள், உடனடியாக ரியாக்ட் செய்யமுடியாது. பயமும், தயக்கமும் இருப்பது சகஜம்தான். பாதிக்கப்பட்ட நடிகை மைனர். அவருக்கு இந்தச் சூழலைக் கையாளும் பக்குவம் போதவில்லை" என்று பதிவிட்டுவருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்