
நடிகர் விஷால் நடிகர் சங்கத்தில் வெற்றி பெற்ற பின், தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு தயாரான போது பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது. அனைத்தையும் ஒரு வழியாக சமாளித்து தயாரிப்பாளர் சங்கத்திலும் வெற்றி பெற்றார் விஷால்.
இந்நிலையில் இவர் மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார். இதற்கு தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த பலர் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். குறிப்பாக இயக்குனர் சேரன், விஷால் பதவி விலக வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். பின் இந்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் விஷால் தலைமையில் கூடிய தயாரிப்பாளர் சங்க பொதுக்கூடத்திலும் பிரச்னைகள் துளிர் விட்டன. மேலும் அங்கு பொதுக் குழு முழுமையாக முடிவடைவதற்கு முன்பே, வாக்கு வாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் ஜே.கே.ரித்திஷ் ஏற்கெனவே தயாரிப்பாளர் சங்க பொறுப்பிலும், நடிகர்சங்க பொறுப்பிலும் இருக்கும் ஒருவர் தேர்தலில் நிற்க கூடாது என்பது சங்க விதி, அதனை விஷால் மீறி விட்டார் என சரமாரியாகக் குற்றம்சாட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.