ஜெயலலிதா பற்றிய கருத்து.... வசமாக சிக்கி கொண்ட எம்.எஸ்.பாஸ்கர்....!!!

 
Published : Dec 30, 2016, 06:11 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
ஜெயலலிதா பற்றிய கருத்து.... வசமாக சிக்கி கொண்ட எம்.எஸ்.பாஸ்கர்....!!!

சுருக்கம்

காமெடி நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ரஜினி, கமல், அஜித், விஜய் என பல நடிகர்களோடு நடித்தவர்.  திருமதி ஒரு வெகுமதி என்கிற படத்தில் ஆரம்பித்த இவரது திரை பயணம் தற்போது வெளிவந்துள்ள  கடவுள் இருக்கான் குமாரு படம் வரை தொடர்கிறது .

காமெடியில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் எம்.எஸ்.பாஸ்கர், இவரின் காமெடி ஸ்டைலிற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

இந்நிலையில் நேற்று அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாராக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தேர்ந்தெடுக்கபட்டார்.

இதில் ஜெயலலிதவுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும், அவரது நினைவு நாளை விவசாயிகள் நாளாக கொண்டாடவேண்டும், மேலும் அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றபட்டது...

இதற்கு எம். எஸ் . பாஸ்கர் வெளியிட்டதாக அதிமுக  கட்சி முட்டாள்கள் நிறைந்த கட்சி என்றும், இறந்த ஒருவருக்கு எப்படி நோபல் பரிசு கொடுக்க முடியும் என்றும், ஏற்கனவே டிசம்பர் 23 அன்று மறைந்த பிரதமர் சரண்சிங் அவர்களின் நினைவாக விவசாயிகள் தினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

மேலும் குற்ற வழக்கு, சிறை சென்றவருக்கு எப்படி பாரத ரத்னா விருது கொடுப்பது என வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி  வைரலானது.

தற்போது அவர் இதை மறுத்துள்ளார். நான் இந்த பதிவை போடவில்லை என்றும் . எனக்கு அரசியல் ஈடுபாடு கிடையாது. என்னுடைய நண்பர்களான சிங்கமுத்து, மற்றும் ஆனந்த் ராஜ் ஆகியோர் அந்த கட்சியில் உள்ளனர்.

நான் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். எனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!
வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!