இனி யாராலும் தடுக்க முடியாது! VIPகளின் செக்ஸ் லீலைகளை அம்பலபடுத்தும் நடிகைகள்..!

By manimegalai aFirst Published Oct 10, 2018, 1:21 PM IST
Highlights

உலக அளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதாக சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. மற்ற துறைகளை காட்டிலும் சினிமாத்துறையில் பாலியல் அச்சுறுத்தல்கள் கொஞ்சம் அதிகம் என்றே கூறலாம்.

உலக அளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதாக சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. மற்ற துறைகளை காட்டிலும் சினிமாத்துறையில் பாலியல் அச்சுறுத்தல்கள் கொஞ்சம் அதிகம் என்றே கூறலாம்.

கோலிவுட், டோலிவுட், ஹாலிவுட் என தொடர்ந்து பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவுகள் குறித்து வெளிப்படுத்தி வருகிறார்கள். 

மேலும் இப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு, பலரும் ஆதரவாக குரல் கொடுத்து வரல்கொடுத்து வரும் நிலையில், தற்போது  தமிழ் திரையுலகிலும் இப்பிரச்சினை பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே நடிகைகள் சமந்தா, வரலட்சுமி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டின் சர்ச்சையின்போது தொடங்கப்பட்  (#metoo) ஹாஷ்டாக் மற்றும் இயக்கம் தற்போது  உலக அளவில் பிரபலமாகியுள்ளது. 

சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகரும் இயக்குனருமான நானா படேகர் மீது அதிரடியாக பாலியல் புகார் கூறி   சர்ச்சையை ஏற்படுத்தினார்.  

இந்நிலையில் தற்போது வைரமுத்து மீது முகம் தெரியாத பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைத் துணிந்து வெளியில் சொல்வது எதிர்காலத்தில் இப்பிரச்சினை குறைவதற்கான காரணமாக இருக்கும் எனப் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

பெண்களுக்கு எதிரான இந்தக் கொடுமைகளைத் தடுக்கும்விதமாக ஒரு வருடத்திற்கு மேலாக சேவ் ஷக்தி என்ற அமைப்பைத் நடத்தி வருவதாகவும். “இதுபோன்ற சம்பவங்களை அதிகமாகக் கேட்பது அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது". காலம் தவறினாலும் சொல்லாமல் விடக் கூடாது என்று கூறுகின்றனர் வரலட்சுமி. தைரியமாக வெளியே வந்து தங்களது கதைகளைக் கூறிய பெண்களுக்கு நன்றி. கடந்த ஆண்டில் இருந்து நான் #metooவுக்காக நிற்கிறேன். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்களும் தங்களது உரிமைகளுக்காகப் போராட வேண்டும்” எனக் நடிகை வரலட்சுமி கூறியுள்ளார்.

மேலும் உலக அளவில், மிகவும் ட்ரெண்ட் ஆகி, #metoo  என்கிற ஆஷ்டாக் பல VIP க்களை பாலியல் சர்ச்சையில் சிக்க வைத்து வருகிறது என்பதும்  இதில் அதிகப்படியாக குற்றங்களை அடுக்கி வருபவர்கள் நடிகைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

click me!