
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமான நாளில், இருந்தே... மோகன் வைத்தியாவை அப்பா அப்பா என மனதார கூப்பிட்டு வந்தவர் இலங்கையை சேர்ந்த போட்டியாளர் தர்ஷன்.
நேற்றைய நிகழ்ச்சியில் கூட, தன்னுடைய அப்பா, அம்மா, இலங்கையில் பட்ட கஷ்டம். இந்த நிலைக்கு வர எப்படி கஷ்டப்பட்டு வந்தேன், தனக்காக தன்னுடைய தங்கை செய்த உதவி என அனைத்தையும், கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார்.
தற்போது வெளியாகியுள்ள ப்ரோவில் "பிக்பாஸ் வீட்டில் உள்ளே... அனைவரும் ஒன்றாக பேசி கொண்டிருந்தபோது தர்ஷன், மோகன் வைத்யாவை 'அப்பா' என்று மிகவும் சாதாரணமாக கூப்பிட்டார். உடனே மோகன் வைத்யா, 'இனிமேல் என்னை அப்பா என்று கூப்பிடாதே, அங்கிள் என்றே கூப்பிடு' என்று கூற அதனை அனைவரும் கண்டித்தனர். குறிப்பாக சாண்டி, மோகன் வைத்யா மீது உள்ள தவறை அவருடைய முன்பே கூறினார்.
இதை தொடர்ந்து பாத்திமாபாபு, மோகன் வைத்தியாவிடம் 'அந்த புள்ள எந்தமாதிரியான பேக்ரவுண்டில் இருந்து வந்திருக்கின்றான் என்பதை புரிந்து கொள்ளாமல் இருக்கின்றீர்களே. அவன் உங்களை அப்பா என்று ஆத்மார்த்தமாக கூப்பிட்டான் உதட்டில் இருந்து கூப்பிடவில்லை' என்று அறிவுரை கூறுகின்றார். மற்றொரு புறம் தர்ஷன் அழும் காட்சி காட்டப்படுகிறது.
ஏன் மோகன் வைத்தியா இது போல் நடந்து கொண்டார். தர்ஷன் என்ன செய்தார் என்பது இன்றைய நிகழ்ச்சியை பார்த்தல் தான் தெரியும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.