
என்.ஜி.கே. படத்தின் ரிலீசுக்கு பிறகு நடிகர் சூர்யா, 'இறுதிசுற்று' இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி வரும் 'சூரரை போற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில், பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகன் சூர்யா மற்றும் மோகன் பாபு இருவரும் இணைந்து நடித்த காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.
நடிகர் மோகன் பாபுவுடன் நடித்த அனுபவங்கள் பற்றி, நடிகர் சூர்யா மிகவும் உருக்கமான ட்விட் ஒன்றை போட்டார்.
இதுகுறித்து சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பதில், 'மோகன்பாபுவுடன் இணைந்து செட்டில் பணிபுரிந்தது, மகிழ்ச்சியை தருகிறது. 500 படங்களுக்கும் மேல் நடித்த ஒரு மாபெரும் நடிகருடன் இணைந்து நடிப்பதால், அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததாக கூறியுள்ளார். மேலும் 'சூரரை போற்று' படத்தில் இணைந்த அவருக்கு எனது நன்றிகள்' என்று கூறியுள்ளார்.
சூர்யாவின் இந்த பதிவிற்கு பதில் அளித்துள்ள மோகன்பாபு, 'உங்களுடைய வார்த்தைகளுக்கு நன்றி சூர்யா. உங்களுடைய ஒழுக்கம் மற்றும் எளிமை உங்களுடைய நல்ல குணத்தை காட்டுகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பில் உங்களை மீண்டும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கின்றேன், என் இளமையான நண்பரே!' என்று சுவாரஸ்யமாக பதில் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.