
பாலிவுட் திரையுலகிற்கு சென்றதும், அடிக்கடி நடிகை கீர்த்தி சுரேஷ் விதவிதமான போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த ஓரிரு தினத்திற்கு முன், மாடர்ன் உடையில் வெளிநாட்டில் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட இவர், தற்போது... மொட்டை மாடியில் பாத் டவல் அணிந்தவாறு உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
பல வாரிசு நடிகைகள், திரையுலகில் அறிமுகமாகியும் அவர்களால், நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை. ஆனால் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு, ஆரம்பத்தில் சில படங்கள் தோல்வியை கொடுத்தாலும், இவர் சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன், மற்றும் ரெமோ ஆகிய படங்கள் வெற்றி பெற்றதால், தனுஷ், விக்ரம், சூரியா, விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
தமிழ் மற்றும் இன்றி தெலுங்கு திரையுலகிலும் இவர் பிஸியாக மாறினார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'மகாநடி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதை விட, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார் கீர்த்தி சுரேஷ். அந்த வகையில் தற்போது பாலிவுட் திரைப்படம் ஒன்றிலும் கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று, வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே உடல் எடையைகுறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறியிருக்கும், கீர்த்தி... மொட்டை மாடியில், பாத் டவல் அணிந்தவாறு ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.