மிஸ் கேரள அழகிகள் மரணம் ; போதை பொருள் வாங்க மறுத்ததால் அச்சுறுத்தல் ; ஆடி காரில் பின் தொடர்ந்தவர் கைது !!

By Kanmani PFirst Published Nov 29, 2021, 7:02 AM IST
Highlights

Miss Kerala Models | போதை பொருள் வாங்க மறுத்ததால் காரை  பின் தொடர்ந்து அச்சுறுத்தியதாக கைதான ஆடி கார் மர்ம நபர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் அன்சி கபீர். இவரது தோழி அஞ்சனா சாஜன். மாடல் அழகிகளான இவர்கள் கடந்த 2019-ம் ஆண்டு  மிஸ் கேரளா அழகி போட்டியில் பங்கேற்று முதல் இரண்டு இடங்களை பிடித்தவர்கள்.

இவர்கள் இருவரும் சமீபத்தில் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த விருந்தில் கலந்து கொண்டுவிட்டு திரும்பும் போது, அவர்கள் சென்ற கார்  தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் அன்சி கபீர், அஞ்சனா சாஜன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து எர்ணாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மாடல் அழகிகள் அன்சி கபீர், அஞ்சனா சாஜன் சாவில் மர்மம் இருப்பதாகவும், விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும் புகார்கள் கிளம்பின.

மேலும் எர்ணாகுளத்தில் விருந்து நடந்த ஓட்டலில் மாடல் அழகிகள் அன்சி கபீர், அஞ்சனா சாஜனுடன் சிலர் தகராறு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக எர்ணாகுளம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் விபத்திற்கு முன், அந்த இரு பெண்களின் காரை சந்தேகப்படும் வகையில் ஒரு 'ஆடி' கார் பின்தொடர்ந்தது தெரியவந்தது.அதோடு விருந்து நடைபெற்ற ஓட்டல் சிசிடிவி காட்சிகள் அளிக்கப்பட்டிருப்பதையும் போலீசார் கண்டறிந்தனர். இது தொடர்பாக ஓட்டல் அதிபர்  ராய் வயலட் கைது செய்யப்பட்டார்..

இந்நிலையில் மாடல் அழகிகளின் காரை பின் தொடர்ந்த ஆடி கார் மரமா நபரை போலீசார் கண்டறிந்து கைது செய்துள்ளனர். பெண்களை காரில் பின்தொடர்ந்தவர் சைஜு தங்கச்சன் என தெரியவந்தது.அவரிடம் நடத்திய விசாரணையில்;  விருந்தில் பங்கேற்ற இவர், அந்த இளம் பெண்கள் இருவருக்கும் போதைப்பொருட்களை கொடுத்துள்ளார்.அதை அவர்கள் வாங்க மறுத்துவிட்டு இரண்டு அழகிகளும் காரில் சென்று விட்டனர். இதனால் கடுப்பான தங்கச்சன் 'அவர்களை காரில் பின் தொடர்ந்துள்ளார். பின்னர் விபத்து ஏற்படும் வகையில் அவர்கள் சென்ற கரை சேஸ் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து,  தவறான நோக்கில் பெண்களை பின் தொடர்தல் மற்றும் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அலட்சியமாக நடந்து கொண்டது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சைஜு தங்கச்சனை கைது செய்தனர். 

click me!