
"ஆம்பளையா இருந்தா மீம்ஸ் இப்படி போடுங்க பார்க்கலாம்" அமைச்சர் ஜெயகுமார் பளார்...!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பெண் நிருபர் கன்னத்தில் தொட்டு பாராட்டு தெரிவிக்கிறார்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனி மொழி ஆளுநரின் செய்கைக்கு அதிருப்தி தெரிவித்த நிலையில், இது குறித்து, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஒரு பதிவிட்டுள்ளார்
அதில்,
இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த சமயத்தில்,மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, பெண்களை இது போன்று இழிவாக பேசுவதும், தவறாக விமர்சனம் செய்வதும் அழகில்லை..
அதிலும் குறிப்பாக மீம்ஸ் மூலம் கேவலாக சித்தரிக்கும் நபர்கள்,மீம்ஸ் போடும் போது பெயர் மற்றும் மொபைல் எண்ணையும் சேர்த்து பதிவிட்டால் தான், அவர்கள் ஒரு ஆண்மகன் என என்னால் ஏற்றுக் கொள்ள முடியும்.அதைவிட்டுவிட்டு பேடி போல கீழ்த்தரமா நடந்துக்கொள்ள உங்களுக்கு அசிங்கமா இல்லையா .? என அவருடைய கோபத்தையும், மனதில் தோன்றியதையும் தெரிவித்து உள்ளார். மேலும் பெண்கள் தானாக முன்வந்து புகார் கொடுத்தால் தான் இதற்காக நடவடிக்கை எடுக்க முடியும்.
பல பிரச்சனைகளையும் தவிர்க்க முடியும் என தெரிவித்து உள்ளார்.
சொல்லப் போனால் முழுக்க முழுக்க பெண்களுக்கு ஆதரவாக பேசிய அமைச்சர் ஜெயகுமார் மீது பெண்களுக்கு தனி மரியாதை ஏற்பட்டு உள்ளது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.