
நடிகர் சிம்பு காவிரி தண்ணீருக்காக செய்தியாளர்கள் சந்திப்பின் போது கர்னாடக மக்களுக்கு வைத்த அன்பான வேண்டுகோளை அடுத்து, கர்னாடக மக்களும் நடிகர் சிம்புவின் பேச்சுக்கு அதிக மரியாதை செலுத்தினர்
அதாவது, தமிழக மக்களுக்கு காவிரி நீரை கொடுக்க கன்னட தாய்மார்களுக்கு மனது உள்ளது என்பதை கூற, ஒரே ஒரு டம்ளரில் தண்ணீர் கொடுப்பது போல வீடியோ எடுத்து பதிவிடுங்கள் போதும் என்றார். அதற்கேற்றார் போல் கன்னட மக்களும் ஒரு குவளை தண்ணீர் தருவது போல் வீடியோ எடுத்து பதிவிட்டு இருந்தனர்
நடிகர் சிம்புவின் பேச்சு கன்னட மக்களுக்கு அதிகம் பிடித்து போகவே, மக்கள் மத்தியில் ஹீரோ ஆனார்.
இந்நிலையில்,நடிகர் சிம்பு இன்று காலை சேலம் ழூக்கனேரி ஏரியை சுற்றி பார்த்தார். உடன் சமுக ஆர்வலர் பியுஸ் அழைத்து சென்றார். இதன் மூலம் நடிகர் சிம்பு அரசியல் வர எதாவது ப்ளான் பண்றாரா ? அல்லது சமூக ஆர்வலர் பியுஸ் உடன் சேர்ந்து சமூக நலனில் ஈடுபட உள்ளாரா..?
அல்லது கோடையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நீர் நிலைகளுக்கு சென்று சுற்றி பார்க்க சென்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.