
வெள்ளித்திரை நடிகைகளுக்கு நிகராக சின்னத்திரை நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக இவர்களும் வெள்ளித்திரையில் நடிகையாக முத்திரைப்பதித்து வருகின்றனர்.
இப்படி சின்னத்திரையில் இருந்து சென்று, முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவரை தொடர்ந்து இதே தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து வெள்ளித்திரைக்கு சென்றுள்ளவர் ஜாக்குலின்.
இவர் கல்லூரி படித்துக்கொண்டு இருந்தபோதே சின்னத்திரையில் சீரியலில் நடித்தார். பின் தொகுப்பாளராக ரசிகர்கள் மனதில் நிலைநிறுத்திக்கொண்டு தற்போது திரைப்பட நாயகியாகவும் மாறிவிட்டார்.
இந்நிலையில் இவர் சமீப காலமாக ஷாம் என்கிற ஆண் நண்பருடன் இன்ஸ்டாகிராம் பகுதியில் சற்று ரொமான்டிக்காக பேசி வந்ததாக கிசிகிசுக்கப் பட்டது. இது குறித்து அவரிடமே பலர் இந்த கேள்வியை முன்வைத்தனர்.
இதற்கு பதில் அளித்துள்ள ஜாக்குலின். ‘அய்யோ நானும் ஷாமும் நல்ல நண்பர்கள், நாங்கள் இன்ஸ்டாவில் பேசிக்கொள்வதை பார்த்து எல்லோரும் காதலிப்பதாக கூறுகிறார்கள்.
தற்போதைக்கு நான் சிங்கிள் தான் பாஸ், நயன்தாராவிம் தங்கையாக தற்போது 'கோலமாவு கோகிலாவில்' நடித்து வருகின்றேன்’ என கூறியுள்ளார். இதன் மூலம் தன்னுடைய காதல் கிசுகிசுவிற்கும் முற்று புள்ளி வைத்தார் ஜாக்குலின்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.