எம்.ஜி.ஆர் 100 வது பிறந்த நாள் - உச்சகத்துடன் கொண்டாடிய நடிகர் சங்கம்.....!!!

 
Published : Jan 17, 2017, 06:23 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
எம்.ஜி.ஆர் 100 வது பிறந்த நாள் - உச்சகத்துடன் கொண்டாடிய நடிகர் சங்கம்.....!!!

சுருக்கம்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்  100 வது பிறந்த நாள்  விழாவை சிறப்பிக்கும் விதமாக, நடிகர் சங்கம் சார்பில் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்பு நடிகர் சங்க வளாகத்தில், அணைத்து கலைஞர்களும் கலந்து கொண்டு. எம்.ஜி.ஆர் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சங்க தலைவர் நாசர், இந்த தமிழகமே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுகிறது என்றார், மேலும் திரைத்துறையினருக்கு அடையாளம் மற்றும் முகவரி கொடுத்து பிரமாண்ட பாதையை அமைத்து கொடுத்தவர் எம்.ஜி .ஆர் என குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து பேசிய விஷால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் செய்த நல்ல விஷயங்களை மக்கள் இன்று வரை நினைவில் கொண்டு கொண்டாடி வருகின்றனர் என்றார்.

மேலும் இன்று அவருக்கு நடிகர் சங்கம் முன்பு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்வதாகவும், இன்று தன்னால் முடிந்தவரை தான் சமூக பணி செய்வதற்கு உந்துதலாக இருந்தது எம்.ஜி.ஆரின் செயல்பாடுகள் தான் என கூறியுள்ளார். 

மேலும் இதில் நடிகர் சத்யராஜ், பிரபு, குட்டி பத்மினி, கார்த்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிழிந்த ஆடை அணிந்த டாக்ஸிக் நடிகை: விலை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!
ஜெட் வேகத்தில் நடந்து முடிந்த ஷூட்டிங்: திரையரங்கு ரேஸில் இடம் பிடிக்கும் D54 படம்!