ஹீரோயின் ஆனார் 'மேயாத மான்' இந்துஜா..!

 
Published : Nov 11, 2017, 07:36 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
ஹீரோயின் ஆனார் 'மேயாத மான்' இந்துஜா..!

சுருக்கம்

meyatha maan indhuja acting heroine

'மேயாத மான்' படத்தில், நடிகை பிரியா பவானியை விட பலரையும் கவர்ந்தது, வைபவிற்கு தங்கையாக நடித்த இந்துஜாவின் நடிப்பு தான். வேலூரை சேர்ந்த இந்துஜா திரைத்துறை மீது ஏற்பட்ட ஈர்ப்பால் படத்தில் நடித்தே தீர வேண்டும் என பல இடங்களுக்கும் வாய்ப்பிற்காக அலைந்தவர்.

'மேய்த்த மான்' ஆடிஷனில் கலந்துகொண்டு வைபவிற்கு தங்கையாக நடிக்க கமிட் ஆனார். இந்தப் படத்தில் பக்கா நார்த் மெட்ராஸ் பெண்ணாக  நைட்டியை மடக்கி கட்டிக்கொண்டு இவர் ஆடிய ஆட்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இவருடைய நடிப்பிற்குக் கிடைத்த அங்கீகாரமாக இவர் முதல் திரைபடமான 'மேயாத மான்' வெளியாவதற்கு முன்பே ஹீரோயினாக 'பில்லா பாண்டி' படத்தில் கமிட் ஆனார். 

ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில், இந்துஜா நாயகியாக நடித்துள்ளார். இரண்டாவது நாயகியாக சாந்தினி நடித்துள்ளார். 'பில்லா பாண்டி' படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து போஸ்ட் ப்ரோடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அடுத்த மாதம் இந்த படம் ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மேக்கப் தொல்லை எனக்கு இல்லை... நடிகை சாய் பல்லவி ஓபன் டாக்
ஆஸ்கர் ரேஸில் அடுத்த லெவலுக்கு சென்ற ஒரே ஒரு இந்திய படம் - விருதை தட்டிதூக்குமா?