'மெட்டி ஒலி' சீரியல் நடிகை உமா மகேஸ்வரி திடீர் மரணம்..! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!

Published : Oct 17, 2021, 11:38 AM IST
'மெட்டி ஒலி' சீரியல் நடிகை உமா மகேஸ்வரி திடீர் மரணம்..! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!

சுருக்கம்

'மெட்டி ஒலி' சீரியல் (Metti Oli Serial) நடிகை உமா மகேஸ்வரி (Uma Maheshwari) உடல் நலக்குறைவு காரணமாக திடீரென மரணமடைந்துள்ளார் (Pass away). இந்த தகவல் சின்னத்திரை வட்டாரத்தை சேர்ந்தவர்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இவருக்கு வயது 40.  

'மெட்டி ஒலி' சீரியல் நடிகை உமா மகேஸ்வரி உடல் நலக்குறைவு காரணமாக திடீரென மரணமடைந்துள்ளார். இந்த தகவல் சின்னத்திரை வட்டாரத்தை சேர்ந்தவர்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இவருக்கு வயது 40.

சன்டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மெகா ஹிட்டான 'மெட்டி ஒலி' சீரியலை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. இதில் விஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் உமா மகேஸ்வரி. இதை தவிர 'மஞ்சள் மகிமை', 'கதையின் கதை', போன்ற தமிழ் சீரியல்களிலும், 'ஈ பார்கவி நிலையம்' என்கிற மலையாள தொடர்களிலும் நடித்து பிரபலமானார். சுமார் 13 வருடங்கள் சின்னத்திரையில் நிலையான இடத்தை பிடித்து நடித்து வந்த உமா மகேஸ்வரி ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் செய்திகள்: இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது இவரா? வெளியான அதிர்ச்சி தகவல்..!

 

கால்நடை மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டபின் சின்னத்திரை உலகை விட்டு விலகினார். அதே நேரத்தில் 'ஸ்ரீ சாய் பொத்திக்' ஒன்றை துவங்கி, தொழில்துறையிலும் தன்னுடைய திறமையைக் காட்டினார். நீண்ட இடைவெளிக்குப்பின் சீரியல்களில் நடிக்காவிட்டாலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கிச்சன் சூப்பர் ஸ்டார்' நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விளையாடினார். இதில் இரண்டு முறை கிட்சன் ஆப் தி வீக் வாங்கி தன்னுடைய சமையல் திறமையை காட்டி நடுவர்களை அசர வைத்தார்.

மேலும் செய்திகள்: யாஷிகாவுடன் காதல்... அபிராமியுடன் மூச்சு முட்டும் நெருக்கம்..! வைரலாகும் நிரூப்பின் புகைப்படங்கள்..!

 

மீண்டும் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிக்கும் மனநிலையில் தான் உள்ளேன் என அண்மையில் பிரபல வார இதழுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் உமாமகேஸ்வரி. இந்நிலையில் இவர் கடந்த ஒரு சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், திடீரென அவர் மரணமடைந்து உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் சீரியல் வட்டாரத்தை சேர்ந்தவர்களையும், ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மேலும் செய்திகள்: பணம் தான் முக்கியம்... பட வாய்ப்புகள் கிடைக்காததால் த்ரிஷா எடுத்த அதிரடி முடிவு..!

 

40 வயதாகும் இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் இவருடைய தந்தை அசிஸ்டன்ட் டைரக்டர் என்பதாலும், இவரது சகோதரி வனஜா சீரியல் நடிகை என்பதாலும்... எதார்த்தமாக ஷூட்டிங் பார்க்க சென்ற இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முதலாக விஜய் டிவியில் ஒளிபரப்பான 'காலேஜ் ரோடு' என்ற சீரியல் மூலம் தன்னுடைய சின்னத்திரை பயணத்தை துவங்கிய உமா மகேஸ்வரி, கடைசியாகவும் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது திடீர் மறைவிற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

திமிராக நடுவிரலை தூக்கிக் காட்டிய ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்... போலீஸுக்கு பறந்த புகார்
மலேசியாவில் அஜித்தை ரவுண்டு கட்டிய ரசிகர்கள்... கூட்டத்தின் நடுவே கூலாக AK செய்த சம்பவத்தை பாருங்க..!